பல நோய்களுக்கு அருமருந்தாகும் முலாம்பழம்
பழங்களும், காய்கறிகளும் நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு தீர்வாக அமைகின்றன. அதனை தொடர்ந்து உண்பதால் பல அற்புத நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், நீர்ச்சத்து நிறைந்த பழமான முலாம்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் பல நோய்களில் இருந்து நம்மை காக்கும், வெப்பத்தைக் குறைக்கும், மேலும் டையூரிடிக் மற்றும் மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. முழப்பழத்தை உண்பதால் உங்களுக்கு கிடைக்கும் பழங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
முலாம்பழத்தினால் கிடைக்கும் நன்மைகள்
எடை இழப்பு: முலாம் பழமாத்தில் குறைந்த கலோரிகள் உள்ளது. இதனால், இது உங்கள் எடையை கூட்டாது பசியின்மை: பசியின்மையால் அவதிப்படுவார்கள், முலாம்பழத்தை உண்பதால், உடலில் தேங்கியுள்ள நச்சுகள் நீங்கி, பசி அதிகரிக்கும். மலச்சிக்கல்: இப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால் இது செரிமான மண்டலத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. சிறுநீர் பாதை நோய் தொற்று: முலாம்பழங்களில் உள்ள பீட்டா கரோட்டின் சிறுநீர் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும். அசிடிட்டி: இன்று பலரும் அசிடிட்டியால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து முலாம் பழம் உண்பதால், அதிலிருந்து விடுபடலாம். சிறுநீரக கற்கள்: பொட்டாசியம் நிறைந்துள்ள முலாம்பழங்கள் பக்கவாதத்தைத் தடுப்பது மட்டுமின்றி சிறுநீரகக் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.