உலகின் சிறந்த இனிப்பு வகைகளின் பட்டியல் வெளியீடு- 31வது இடத்தினை பிடித்த ரசமலாய்
உலகம் முழுவதுமுள்ள மக்கள் அனைவருக்குமே இனிப்பு வகைகள் என்றால் ஓர் தனி ஈர்ப்பு தான். அதன்படி, உலகின் சிறந்த 50 இனிப்பு வகைகளின் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் பிரான்ஸ் நாட்டின் 'க்ரீப்ஸ்' என்னும் இனிப்பு வகை முதலிடத்தினை பெற்றுள்ளது. பிரேசில் நாட்டின் 'பாம்பகோடா', பெரு நாட்டின் 'கியூசோ ஹெலோடா' உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் இனிப்புவகையான ரசமலாய் 31வது-இடத்தினையும், காஜூ கத்லி 41வது-இடத்தினையும் இப்பட்டியலில் பிடித்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் டென்மார்க்கின் 'கோல்ஸ்கால்' மற்றும் ஸ்பெயின் நாட்டின் 'பாஸ்ட்-ச்சீஸ் கேக்' உள்ளிட்டவை கடைசி இடத்தினை பிடித்துள்ளது. இனிப்பு வகைகளின் சுவை மற்றும் அதன்மீது மக்களுக்கு இருக்கும் விருப்பங்களை அடிப்படையாக கொண்டு இப்பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.