பெரும்பாலான கணவர்மார்கள், தங்கள் மனைவியிடம் பார்க்கும் குறைகள் என்ன?
எப்போதும் மனைவிமார்களே குறை பேசுபவர்கள் என இந்த சமூகத்தில் பரவலான ஒரு எண்ணம் உண்டு. அது பொய்! கணவன்மார்களும், தத்தமது மனைவிகள் மீது குறைகள் பட்டியல் வசிப்பதுண்டு. சிலர் அதை வெளிப்படையாக சொல்லுவார்கள். சிலர் எதுக்குடா வம்பு என அடக்கி வாசிப்பதுண்டு. அப்படி, பொதுவாக கணவர்கள், மனைவிகள் மீது கூறும் குறைகள் என்ன என்று பார்ப்போம். கம்யூனிகேஷன் பிரச்சனை: பொதுவாக, ஆண்களுக்கு, பெண்கள் தங்கள் கருத்துகளை அழுத்தம் திருத்தமாக கூறமாட்டார்கள் என்ற எண்ணம் உண்டு. பெண்களுக்கு, தங்கள் எண்ணங்களை சரியாக வெளிப்படுத்த தெரிவதில்லை என கருதுகிறார்கள் ஆண்கள். குழந்தை வளர்ப்பு: குழந்தைகளை, மனைவிகளுக்கு, சரியாய் வளர்க்க தெரியவில்லை என்றும், வளர்ப்பு முறைகளில் முரண்பாடுகளும் ஏற்படுவதுண்டு
கணவன்மார்கள், மனைவிகளிடம் குறைகளாக பார்க்கும் பொதுவான விஷயங்கள்
நெருக்கம் இல்லாமை: மனைவி, சிறு ஸ்பரிசங்களின் மூலம், அவ்வப்போது, தன்னுடைய நெருக்கத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதும், கணவர்மார்களுக்கு பெரிய குறையாக தோன்றுகிறது. தங்கள் மேல் காதல் குறைந்து விட்டதாக கருதுகின்றனர். நிதி முரண்பாடுகள்: நிதி மேலாண்மையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கும். இதனால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒர்க்-லைப் பேலன்ஸ்: பல கணவர்மார்கள், மனைவிகள் பணிக்கு செல்வதால், தங்கள் மேல் இருக்கும் கவனிப்பு குறைகிறது என்று கருதுகிறார்கள். வீட்டு வேலையை பகிர்தல்: பல ஆண்கள், இன்னமும் வீட்டு வேலைகளை அவர்கள் தனியே கவனித்து கொள்ள தயங்குகிறார்கள். அது பெண்களுக்கானது, நாங்கள் உதவி மட்டுமே செய்யமுடியும் என்ற எண்ணம் இன்றும் பல ஆண்களிடம் உள்ளது.