வைரல் செய்தி: மேட்ரிமோனியல் தளத்தில் பதிவிடப்படும் தகவலை கொண்டு, வேலை தேடும் இளம்பெண்
செய்தி முன்னோட்டம்
இந்தியர்கள் எதிலுமே வித்தியாசமானவர்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்து கொண்டே இருக்கிறார்கள். இந்தியர்கள், ஒரு வழியில், ஏதாவது விஷயம் வேலை செய்யவில்லை என்றால், அதற்கான மாற்று வழியை கண்டுபிடிப்பதில் தேர்ந்தவர்கள். அதைத்தான் தற்போது ஒரு பெண் செய்திருக்கிறார். அவர் தனது சொந்த நலனுக்காக ஒரு மேட்ரிமோனியல் தளத்தைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் வரன் தேட அல்ல. வேலை தேட.
சமீபத்தில், லிங்க்ட்-இன் தளத்தில், ஒரு பயனர் இட்ட செய்தி, மிக வைரலாக பரவிவருகிறது
அஷ்வீன் பன்சால் என்ற பயனரின் பதிவின்படி, அவரின் நண்பர், 'ஜீவன்சாத்தி' என்ற மேட்ரிமோனியல் தளத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை குறிப்பிட்டுள்ளார். "ஒரு நண்பர் என்னிடம், ஜீவன்சாத்தி தளத்தைப் பயன்படுத்தி, பல்வேறு நிறுவனங்களின் இழப்பீட்டை ஒப்பிட்டுபார்த்து, அதன்பிறகு அந்தத் நிறுவனத்தில் விண்ணப்பிப்பதாகச் சொன்னார்"
ட்விட்டர் அஞ்சல்
வைரல் செய்தி
So a girl told me she is using #jeevansathi.com to see compensation of different companies through people's profiles and then applying there 😂😂
— Ashveen Bansal (@AshveenBansal) March 6, 2023