இணையத்தில் ட்ரெண்ட் ஆகும், 24 காரட் தூய தங்க தோசை
ஹைதராபாத்தில் உள்ள ஒரு உணவகம், மிகவும் விலையுயர்ந்த தோசையை தயாரித்து வருகிறது. அங்கு விற்கப்படும் ஒரு ஸ்பெஷல் தோசையின் விலை ரூ.1000 என்றால் நம்ப முடிகிறதா? அதிலும், அந்த தோசை 24 காரட் தங்க மூலம் பூசப்பட்ட தோசை என்பது கூடுதல் ஆச்சரியம். பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் செயல்பட்டுவரும், 'ஹவுஸ் ஆஃப் தோசாஸ்' என்ற உணவகம்தான், இந்த வித்தியாசமான தோசை முயற்சியில் இறங்கியுள்ளது. நியூஸ்18-இல் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியின்படி, இந்த தங்க தோசையை சுட்ட பிறகு, நெய் தடவுவது போல, இறுதியாக தங்கமுலாம் பூசப்படும். இந்த தோசைக்கு சைடு டிஷ்ஷாக, வறுத்த முந்திரி, பாதாம், தூய நெய், வறுத்த நிலக்கடலை மற்றும் வறுத்த கடலை பருப்பில் செய்யப்பட்ட சட்னிகள் மற்றும் சுவையான பொடிகள் தரப்படுகின்றன.