Page Loader
இரத்த தானம் செய்பவர்கள் தினம்: இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் ஆச்சரியமான நன்மைகள்
ரத்ததானம் செய்வதனால் ஏற்படும் ஆரோகிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இரத்த தானம் செய்பவர்கள் தினம்: இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் ஆச்சரியமான நன்மைகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 14, 2023
10:54 am

செய்தி முன்னோட்டம்

இரத்த தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக, ஆண்டுதோறும், ஜூன் 14 அன்று, உலக ரத்ததானம் செய்பவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ரத்ததானம் என்பது, பிறர் உயிரை காக்கும் ஒரு உன்னதமான செயல். ரத்த தானம் செய்கையில், பிறருக்கு மட்டுமல்ல, செய்பவருக்கு அதனால் பலவித நன்மைகள் உண்டாகும். அவை என்ன என தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது: தொடர்ந்து இரத்த தானம் செய்வதால், உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு சில சிறந்த நன்மைகள் கிடைக்கும். ரத்த தானம், உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கவும், உதவும். உங்கள் ஹீமோகுளோபின் அதிகமாக இருந்தால், உங்கள் ரத்தம், அடர்த்தியாகவும், ஒட்டும்தன்மையுடனும் இருக்கும். ரத்ததானம் செய்கையில், அந்த ஒட்டும்தன்மை குறைக்கப்படுவதால், மாரடைப்பும் தவிர்க்கப்படுகிறது.

card 2

ரத்த தானம் செய்யும் முன்னர் இலவச ரத்த பரிசோதனை செய்யப்படும்

இலவச மருத்துவ பரிசோதனை: இரத்த தானம் செய்வதற்கு முன், நன்கொடையாளர்கள் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதன் மூலம், ​​யாருக்காவது உயர் இரத்த அழுத்தம் அல்லது ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் போன்ற சில மறைமுக உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். (Hemochromatosis )ஹீமோக்ரோமாடோசிஸைத் தடுக்கிறது: உடலில் உள்ள இரும்புச்சத்தை அதிகமாக உறிஞ்சும் நிலைக்கு பெயர் தான் ஹீமோக்ரோமாடோசிஸ். ரத்ததானம் செய்வதன் மூலமாக, அந்த நிலையின் ஆபத்தை குறைக்கலாம். புதிய இரத்த அணுக்கள் உற்பத்தியைத் தூண்டுகிறது: நீங்கள் இரத்த தானம் செய்யும்போது, ​​உங்கள் உடல், நீங்கள் தானம் செய்து இழந்த இரத்த அணுக்களை சரிக்கட்ட புதிய இரத்த அணுக்களை உருவாக்குகிறது. ரத்ததானம் செய்த 30- 60 நாட்களுக்குள், நீங்கள் இழந்த இரத்த சிவப்பணுக்கள் அனைத்தும் மாற்றப்படும்.