
தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும்
செய்தி முன்னோட்டம்
ஆண்டு தோரும், தை மாதம் 2 ஆம் நாள், திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அந்நாளில், வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின் பெருமைகளை பறை சாற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஈரடியில் வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் குறளை இன்றளவும், பிரதமர் மோடி தொடங்கி பலரும், தங்களது உரையில் மேற்கோள் காட்டி பேசுவதை காணலாம்.
1330 குறள்கள், 133 அதிகாரங்கள் கொண்ட திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் பெருமையை நாடு முழுவதும் பறைசாற்றும் விதமாக மறைமலை அடிகள், இந்நாளை தேர்ந்தெடுத்துள்ளார்.
1921ஆம் ஆண்டு, சென்னையில், 500க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் ஒன்று கூடி, திருவள்ளுவரின் பெயரில், தமிழர்களுக்கென தனி ஆண்டு பின்பற்றுவது என முடிவெடுத்தனர்.
திருவள்ளுவரும் திருக்குறளும்
திருவள்ளுவர் பற்றிய விவரங்கள்
ஆராய்ச்சி நூல்களின் அடிப்படையில், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்று கணக்கிட்டு, அன்று முதல் தமிழ் ஆண்டு, 'திருவள்ளுவர் ஆண்டு' என்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எனினும், வைகாசி மாதம் தான் அவர் பிறந்தார் என்று கொண்டாடப்பட்டு வந்த நிலையில், 1971 -இல் அப்போதைய அரசு, அதை தை 2ஆம் தேதி என்று மாற்றி அறிவித்தது.
மேலும் திருவள்ளுவர் தினத்தை, அரசு விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அன்று முதல், இந்த திருவள்ளுவர் தினத்தன்று, உலகம் முழுவதும், திருவள்ளுவரையும், திருக்குறளின் பெருமையும் உணர்த்தும் விதமாக பல நிகழ்ச்சிகளை நடத்தி, அவரை வணங்குவர்.
ட்விட்டர் அஞ்சல்
திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்
திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன.
— Narendra Modi (@narendramodi) January 16, 2023