NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / யூனியன் பட்ஜெட் 2023: பட்ஜெட் உரையில் கூறப்பட்ட சிக்கில் செல் அனீமியா என்றால் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    யூனியன் பட்ஜெட் 2023: பட்ஜெட் உரையில் கூறப்பட்ட சிக்கில் செல் அனீமியா என்றால் என்ன?
    சிக்கில் செல் அனீமியா என்றால் என்ன?

    யூனியன் பட்ஜெட் 2023: பட்ஜெட் உரையில் கூறப்பட்ட சிக்கில் செல் அனீமியா என்றால் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 01, 2023
    09:09 pm

    செய்தி முன்னோட்டம்

    2023 -24 ஆண்டிற்கான பட்ஜெட் தொடரில் உரை ஆற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறைக்கு ரூ.89,155 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    அதோடு, 2047க்குள் சிக்கில் (Sickle) செல் அனீமியாவை அகற்றும் பணியை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அறிவித்தார்.

    இந்த சிக்கில் செல் அனீமியாவை (SCD) பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

    சிக்கில் செல் அனீமியா ஒரு வித ரத்த சோகை நோயாகும்.

    இந்தியாவில், இந்த ரத்த சோகை, பழங்குடி மக்களிடையே பரவலாக காணப்படுகிறது.

    அதனால், அரசாங்க சார்பில் பழங்குடி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

    அதோடு, 0-40 வயதுக்குட்பட்ட, ஏழு கோடி மக்களைப் பரிசோதனைக்கு உள்ளாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    ரத்த சோகை

    சிக்கில் செல் அனீமியாவால் உடலில் ஏற்படுத்தும் கோளாறுகள்

    இந்த ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட நபரின் சிவப்பணுக்கள், சில விசித்திர ஹீமோகுளோபின்களை கொண்டிருக்கும்.

    அந்த ரத்த அணுக்கள், கடினமாகவும் ஒட்டும் தன்மையுடனும், Sickle வடிவத்திலும் இருக்கும். பொதுவாக, ஆரோக்கியமான சிவப்பணுக்கள் வட்ட வடிவத்திலும், நெகிழ்ச்சி தன்மையுடனும் இருக்கும்.

    இந்த வகை கோளாருடைய சிவப்பணுக்கள், சீக்கிரத்தில் இறந்துவிடும். அதனால், உடலில், ரத்த சோகை ஏற்பட்டு, திசுக்களுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை.

    அடுத்து, இந்த வகை SCD செல்கள், சிறிய இரத்த நாளங்கள் வழியாகச் செல்லும்போது, ​​அவை சிக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கின்றன.

    இதனால் பக்கவாதம், கண் பிரச்சனைகள், மற்றும் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

    பிறப்பிலேயே ஏற்படும் இவ்வகை ரத்த சோகையின் அறிகுறிகள், குறைத்தது ஐந்து மாதம் முதலே தென்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பட்ஜெட் 2023
    நிதியமைச்சர்
    நிர்மலா சீதாராமன்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    பட்ஜெட் 2023

    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் தமிழ்நாடு
    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் நிர்மலா சீதாராமன்
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் திரௌபதி முர்மு
    யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை நிர்மலா சீதாராமன்

    நிதியமைச்சர்

    கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தில் 4000 ஊழியர்கள் பணி நீக்கம் - காரணம்? உலக செய்திகள்
    மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன்

    மக்களவையில் சாதி, மதத்தை பற்றி பேசக்கூடாது: சபாநாயகர் எச்சரிக்கை! இந்தியா
    10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு இந்தியா
    மருத்துவ படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும்-நிர்மலா சீதாராமன் பேச்சு தமிழ்நாடு
    2023 பட்ஜெட் - உணவு தானியங்கள் இலவசமாக அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு பட்ஜெட் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025