சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக
ஆண்டுதோறும் ஏற்படும் புற்றுநோய் இறப்புகளில், 10ல் ஏழு பேர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தான் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த கொடியநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு, ஆண்டுதோறும், பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பிப்ரவரி 4, 2000-தில், பாரிஸில் நடைபெற்ற, புற்றுநோய்க்கு எதிரான உலக உச்சி மாநாட்டில், இந்த குறிப்பிட்ட தேதியை, 'உலக புற்றுநோய் தினமாக' கடைபிடிக்க போவதாக முடிவெடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக, சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) ஒன்று துவங்கப்பட்டது. இதன் மூலம், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சையை ஊக்குவிப்பதற்காகவும், ஒரு ஒருங்கிணைந்த குழு, உலகமெங்கும் பணியாற்ற ஏதுவாக அமைகிறது.