LOADING...
பபிள் டீ அதிகம் குடிப்பதால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்படுமா?
Boba Tea இளைய தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமான பானமாக உருவெடுத்துள்ளது

பபிள் டீ அதிகம் குடிப்பதால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்படுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2026
04:40 pm

செய்தி முன்னோட்டம்

இன்றைய இளைய தலைமுறையினரிடையே, குறிப்பாக Gen Z பிரிவினரிடையே 'பபிள் டீ' எனப்படும் Boba Tea மிகவும் பிரபலமான பானமாக உருவெடுத்துள்ளது. ஆனால், இந்தப் பானத்தை அடிக்கடி பருகுவது ஆரோக்கியத்திற்கு தீவிரமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. 'ஃபுட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷன்' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பபிள் டீயை தொடர்ந்து உட்கொள்வது சிறுநீரகக் கற்கள், கல்லீரல் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்றக் குறைபாடுகளை உண்டாக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. தைவானை பூர்வீகமாகக் கொண்ட இந்த பானத்தில் சேர்க்கப்படும் இனிப்பு ஊட்டிய மரவள்ளிக்கிழங்கு முத்துக்கள் மற்றும் அதிகப்படியான சர்க்கரையே இதற்கு முக்கிய காரணமாகும்.

தகவல்கள்

ஆய்வு சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள்

ஒரு சராசரி பபிள் டீ கோப்பையில் 300 முதல் 500 கலோரிகள் மற்றும் 40 முதல் 60 கிராம் வரை சர்க்கரை உள்ளது. இது கல்லீரலில் கொழுப்பு படிவதற்கும் (NAFLD), சிறுநீரகத்தில் தாதுக்கள் படிகங்களாக மாறி கற்கள் உருவாவதற்கும் வழிவகுக்கிறது. ருசிக்காகச் சேர்க்கப்படும் ஜெல்லி போன்ற முத்துக்கள், அகலமான Straw வழியாக உள்ளிழுக்கப்படும் போது, அது நேரடியாகத் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இத்தகைய சம்பவங்களால் உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மேலும், எக்ஸ்-ரே சோதனைகளின் போது இந்த முத்துக்கள் சிறுநீரக கற்களை போலவே தெரிவதால், மருத்துவர்கள் நோயை கண்டறிவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

தவிர்த்தல்

தவிர்க்கும் முறைகள்

பபிள் டீயை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், பின்வரும் மாற்றங்களை செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சர்க்கரை அளவைக் குறைத்து அல்லது சர்க்கரை இல்லாமலோ ஆர்டர் செய்யலாம். சிறிய அளவிலான கோப்பைகளை தேர்ந்தெடுக்கலாம். கலோரி அதிகம் கொண்ட 'டாப்பிங்ஸ்' மற்றும் சிரப்களை குறைக்கலாம்.

Advertisement