ஒரே ஆண்டில் 4 மடங்கு வளர்ச்சி: வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக மாறுகிறதா இந்தியா?
செய்தி முன்னோட்டம்
வேற்றுமையில் ஒற்றுமை என்று கூறுவதற்கு ஏற்ப, இந்தியா முழுவதும் சுற்றுலா செல்வதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
காலச்சாரம், வரலாறு, வியக்கவைக்கும் கட்டிடக்கலை, அழகழகான பிரம்மாண்டமான கட்டிடங்கள், கோவில்கள், எழில் கொண்டும் மலைபிரதேசங்கள், கடற்கரைகள் என்று உள்நாட்டவர் மட்டுமல்லாமல் வெளிநாட்டவரையும் கவரும் எக்கச்சக்கமான தலங்கள் உள்ளன.
கோவிட் தொற்று பாதிப்பு குறைந்து, ஊரடங்கு முழுவதுமாக விலகிய பிறகு, இந்தியாவில் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியர்கள் மட்டுமல்லாமல், நாட்டின் அழகு, வெளிநாட்டவரையும் பெருமளவில் ஈர்த்துள்ளது.
குறிப்பாக, 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2022 ஆம் ஆண்டில், சுற்றுலாவுக்காக, விடுமுறைக்காக வெளிநாட்டவரின் வருகை 4 மடங்கு அதிகரித்துள்ளது.
சுற்றுலா துறை
15 லட்சத்தில் இருந்து 61 லட்சமாக அதிகரித்து வெளிநாட்டு டூரிஸ்ட்டுகள்
சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, 2019 ஆம் ஆண்டு, அதாவது கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டில், இந்தியாவில் கிட்டத்தட்ட 1 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் (Foreign Tourist Arrivals) வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு நாட்டில் சுற்றுலாத் தொழில் புத்துயிர் பெற்று வருவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. சமீபத்தில் கிடைத்த தகவல்களின்படி, 2022இல், 60.19 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்தள்ளனர். 2021இல் இந்த எண்ணிக்கை 10.52 லட்சமாக இருந்தது" என்றும் அவர் கூறினார்.
சுற்றுலா அமைச்சகம், 1800-111-363 என்ற இலவச எண்ணில் 24×7 பன்மொழி உதவிமையத்தை அமைத்துள்ளது. ஜெர்மன், பிரஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன், போர்த்துகீசியம், ரஷ்யன், சீனம், ஜப்பானியம், கொரியன், அரபு ஆகியவை அடங்கும்.