Page Loader
கோடைவிடுமுறைக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, இந்தியாவின் அழகிய 'நீல' கடற்கரைகள் 
இந்தியாவின் 'நீல கொடி' அங்கீகாரம் பெற்ற அழகிய கடற்கரைகள்

கோடைவிடுமுறைக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, இந்தியாவின் அழகிய 'நீல' கடற்கரைகள் 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 13, 2023
09:29 am

செய்தி முன்னோட்டம்

'நீலம்' அல்லது 'நீல கொடி' கடற்கரைகள் அவற்றின் தூய்மை மற்றும் அழகுக்காக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களாகும். நீலக்கொடி அங்கீகாரம் என்பது நீண்ட வரலாறு, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்த கடற்கரைகளுக்கு வழங்கப்படும், சுற்றுசூழலுக்கு ஏற்ற தலங்கள் என்ற சான்று பெற்றவை ஆகும். இந்த சான்றை, அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுற்றுசூழல் தொண்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்தியாவில் கோடைவிடுமுறையைக் கொண்டாட, கண்டிப்பாக பார்க்க வேண்டிய சில கடற்கரைகள் இதோ: சிவராஜ்பூர் கடற்கரை, குஜராத்: துவாரகா-ஓகா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிவராஜ்பூர் கடற்கரை, அமைதியான, ஆழமற்ற நீரைக் கொண்ட, அழகிய வெள்ளை மணல் கடற்கரையாகும். இந்த பீச், 2020ஆம் ஆண்டில், டென்மார்க்கை தளமாகக் கொண்ட சர்வதேச நிறுவனத்திடமிருந்து, மதிப்புமிக்க நீலக் கொடி சான்றிதழைப் பெற்றது.

card 2

மனதிற்கு அமைதியை தரும் இந்திய கடற்கரைகள்

கோல்டன் பீச், ஒரிசா: இந்த பூரி கடற்கரை அல்லது கோல்டன் பீச், ஆசியாவிலேயே நீலக் கொடி சான்றிதழைப் பெற்ற முதல் கடற்கரையாகும். கோனார்க் சூரியன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த கடற்கரைக்கு அக்டோபர் 2020 இல் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோக்லா கடற்கரை, டையூ: இந்த பீச், இந்தியாவின் பிரமிக்க வைக்கும் அழகான, தூய்மையான கடற்கரைகளில் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும், உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலாவாசிகள் வருகை தருகின்றனர். இந்த பீச்சில் பாராசெய்லிங் மற்றும் படகு சவாரி செய்து மகிழலாம். காசர்கோடு கடற்கரை, கர்நாடகா: கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் நீளம் உடைய இந்த பீச்சில், மணலும், மரங்களும் சூழப்பட்டு அழகாக இருக்கும். இந்த கடற்கரைக்கு 2020இல் நீலக் கொடி சான்றிதழ் வழங்கப்பட்டது.