இந்த ஆறு ரயில் பயணங்களை மிஸ் பண்ணிடாதீங்க; சுற்றுலா ஆர்வலர்களுக்கு சூப்பர் டிப்ஸ் கொடுத்த மத்திய அமைச்சர்
இந்தியாவில் ரயில் பயணத்தின் போது ஜன்னலுக்கு வெளியே பார்ப்பது என்பது நமது நாட்டின் இயற்கை அழகை அனுபவிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். இந்திய ரயில் பயணங்கள் பொதுவாக மிகவும் குதூகலமான சில காட்சிகளை வழங்குகின்றன. மேலும் வேறு எந்த பொதுப் போக்குவரத்திலும் இல்லாத வகையில் இந்தியாவின் எப்போதும் மாறிவரும் நிலப்பரப்புகளை கண்டுகளிக்க முதன்மையானதாக இது உள்ளது. இந்நிலையில், இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (செப்டம்பர் 23) இந்தியாவின் மிக அற்புதமான சில ரயில் பாதைகளின் பட்டியலைப் பகிர்ந்துள்ளார். நீலகிரி மலை ரயில், குஜராத்தின் கட்ச் மற்றும் ஜம்மு காஷ்மீரின் பனிஹால் மற்றும் பத்காம் உள்ளிட்ட மொத்தம் ஆறு ரயில் பாதைகளை தேர்ந்தெடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரயில்வே அமைச்சர் பகிர்ந்த ரயில் பாதைகளின் பட்டியல்
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்த ரயில் பாதைகளின் பட்டியலில் பட்டியலில் முதலாவதாக குஜராத்தின் கட்ச் வழியாக நமோ பாரத் விரைவு ரயில் பயணம் உள்ளது. இது பாலைவனத்தின் துடிப்பான சாயல்கள் மற்றும் ரானின் வெள்ளை மணல் ஆகியவற்றில் ஆழ்ந்த அனுபவத்தை அளிக்கிறது என்று அவர் கூறுகிறார். இதைத் தொடர்ந்து எப்போதும் வசீகரிக்கும் புகழ்பெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான நீலகிரி மலை ரயில் உள்ளது. மூன்றாவதாக பனிஹாலில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பட்காம் வரையிலான பனி நிறைந்த பள்ளத்தாக்கு வழியாக செல்லும் ரயில் பயணம் உள்ளது.
கோவாவின் துத்சாகர் நீர்வீழ்ச்சி
தொடர்ந்து நான்காவதாக இயற்கையின் அற்புதம் என வர்ணிக்கப்படும் கோவாவின் துத்சாகர் நீர்வீழ்ச்சி வழியான ரயில் பயணத்தைக் குறிப்பிட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள கப்பிலில் உள்ள கேரளாவின் கடலோர ரத்தினத்தின் அமைதியான கடற்கரைகள் மற்றும் தென்னந்தோப்புகள் வழியான ரயில் பயணத்தை அஸ்வினி வைஷ்ணவ் ஐந்தாவதாக குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து கல்காவிலிருந்து சிம்லாவிற்கு செல்லும் வரலாற்று யுனெஸ்கோ பாரம்பரிய பொம்மை ரயில் பயணத்தை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார். ரயில் பயணம் மூலம் சுற்றுலாவை பெருக்குவதை நோக்கமாகக் கொண்டு அவர் இந்த பயண பட்டியலை வெளியிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.