கடும் வெயிலில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?
கோடை காலம் மற்றும் வெப்ப அலையால் இந்திய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இது போன்ற அதிக வெப்பத்தில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்பதை இப்போது பார்க்கலாம். வெயில் காலத்தில் வெளியில் விளையாட செல்லும் குழந்தைகள் உட்பட அனைவரும் அதிக தண்ணீர் குடிப்பது அவசியமாகும். மேலும், நீர் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வது உடம்பின் சூட்டை தணிக்க உதவும். வெயில் காலங்களில் செயற்கையான பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை நீர் இழப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் வெயில் காலத்தில் என்ன ஆடைகள் அணிகின்றன என்பது மிகவும் முக்கியமாகும்.
வெப்பத்தால் ஏற்படும் நோய்கள்
உடல் வெப்பநிலையைக் குறைக்க, இலகுரக, தளர்வான, வெளிர் நிற ஆடைகளை உதவும். லேசான பருத்தி ஆடைகளை அணிந்தால், அது வெப்பத்தை சமாளிக்கவும், வியர்வையை ஆவியாக்கவும் பெரிதும் உதவும். கடுமையான வெயில் காலத்தில் மதிய நேரத்தில் குழந்தைகள் வெளியே விளையாட செல்வதை தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக அதிகாலையில் அல்லது மாலை நேரங்களில் அவர்களை விளையாட அனுமதிக்கலாம். வெப்ப சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதம் போன்ற வெப்பம் தொடர்பான நோய்களின் அறிகுறிகளை அறிந்திருக்க வேண்டும். கடுமையான வியர்வை, பலவீனம் மற்றும் குமட்டல் ஆகியவை வெப்ப சோர்வின் அறிகுறிகளாகும், அதே சமயம் சூடான, வறண்ட சருமம் மற்றும் அதிகமான இதயதுடிப்பு ஆகியவை வெப்ப பக்கவாதத்தின் அறிகுறிகளாகும்.