உங்கள் உறவில் ஏற்படும் நம்பிக்கை சிக்கல்களை சமாளிக்க நிபுணர்கள் தரும் டிப்ஸ்
பாதகமான குழந்தை பருவ அனுபவங்கள், அன்பானவர்கள் செய்யும் துஷ்பிரயோகம், உறவுகளில் துரோகம் போன்றவற்றால் மக்களுக்கு உறவுமுறையின் மேல் நம்பிக்கை சிக்கல்கள் உருவாகலாம். நம்பிக்கை சிக்கல்கள் என்றால் உறவில் ஒருவரை நம்ப இயலாததை குறிக்கின்றன. இருப்பினும், நம்பிக்கை இல்லாமல் எந்த உறவும் நிலைத்திருக்க முடியாது. ஒரு உறவில் ஏற்படும் நம்பிக்கை சிக்கல்களை, நீங்கள் எவ்வாறு சமாளிப்பது என நிபுணர்கள் கூறும் அறிவுரைகள் சில: பேசி, சரி செய்ய முயற்சிக்கவும்: உங்கள் துணையுடன், ஏற்பட்ட பிரச்சனைகளை, பேசி சரி செய்ய முயற்சிக்கவும். பல உறவுமுறை சிக்கல்களுக்கு 'கம்யூனிகேஷன் கேப்' தான் காரணமாக இருக்க முடியும். உங்கள் உறவில் ஏற்பட்டுள்ள சிக்கலை பேசி தெளிவுபடுத்துதல் முக்கியம். உங்கள் துணையின் செயல்பாடுகளை பூதக்கண்ணாடி வைத்து கண்கணிப்பதை நிறுத்தவும்.
பிணைப்பை வலுப்படுத்த ரகசியங்களை பகிர்ந்து கொள்ளவும்
சுயமரியாதையை வளர்த்து, பாதுகாப்பின்மையை நீக்குங்கள்: உங்கள் துணைக்கு நீங்கள் தகுதியற்றவராக உணரலாம். அவர்கள் உங்களை விட்டுப் போய்விடுவார்கள் என்று பயப்படலாம். இது உங்கள் சுயமரியாதை மற்றும் பாதுகாப்பின்மையின் பிரதிபலிப்பு. அதை நீக்க, ஆரோக்கியமான விஷயங்களை செய்ய முற்படுங்கள். உங்கள் கடந்த கால காயங்களை அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட காயம், உங்கள் தற்போதைய உறவைப் பாதிக்கலாம். அதனால், உங்கள் துணையை நம்புவது கடினமாகும். இருப்பினும், உங்கள் கடந்தகால அனுபவங்களுக்கு உங்கள் தற்போதைய துணை பொறுப்பல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்திலிருந்து நகர்ந்து, உங்கள் தற்போதைய துணையை நம்ப முயற்சிக்கவும். ரகசியங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்: பிணைப்பை வலுப்படுத்தவும், நம்பிக்கையை வளர்க்கவும், சில ரகசியங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கவும்.