Page Loader
பிரேக்அப் டே 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் கடைசி நாள் இன்று;  அதன் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
பிரேக்அப் டே 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் கடைசி நாள் இன்று

பிரேக்அப் டே 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் கடைசி நாள் இன்று; அதன் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 21, 2023
09:35 am

செய்தி முன்னோட்டம்

காதலர் தினத்துடன் முடிவடைந்த காதலர் வாரம் முழுவதும் காதலர்களுக்கு அர்பணிக்கப்பட்டது போல, பிப்ரவரி 14, காதலர் தினத்திற்குப் பிறகு வரும் ஒரு வாரம் முழுவதும் மக்கள், காதலர் எதிர்ப்பு தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த வாரம், காதலில் தோல்வியுற்றவர்கள், சிங்கிள்கள், பிரிந்த காதலர்கள், தங்கள் கடந்த கால கசப்புகளை மறக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள். இது ஸ்லாப் டே(Slap day) தொடங்கி, பிப்ரவரி 21 அன்று பிரேக்அப் டேயுடன் முடிவடைகிறது. இடையில் கிக் டே(Kick day), பெர்ஃப்யூம் டே(Perfume day), ஃப்ளர்ட் டே(Flirt day) , கன்ஃபெஷன் டே (Confession day), மிஸ்ஸிங் டே(Missing day) என்று கொண்டாடப்படுகிறது. இன்று பிப்ரவரி 21, பிரேக்அப் டே (Break-Up day) என கொண்டாடுகிறார்கள்.

பிரேக்அப் டே

பிரேக்அப் டேயின் முக்கியத்துவம்

காதலர் எதிர்ப்பு வாரத்தின் கடைசி நாளான இன்று, காதலர்கள், தாங்கள் இது நாள் வரையில் இருந்த எதிர்மறை உறவுகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் நாள். மனம் கசந்த உறவுகளை, இன்று முறித்து கொள்ளுங்கள். ஒவ்வொரு உறவும் எளிதானதல்ல என்பதை அனைவருக்கும் நினைவூட்டும் வகையில், இந்நாளில், சிவப்பு இதய வடிவ பலூன்களுக்கு பதிலாக கருப்பு இதய வடிவ பலூன்கள் பறக்க விடப்படுகின்றன. சிலர் இந்த நாளில், தங்கள் முன்னாள் காதலரை விட்டுவிட்டு, சுய அன்பையும், தாங்கள் யார் என்பதைக் கண்டறிந்து ஆராய்வதற்கான வழியையும் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாட, உங்கள் பழைய காதலை மறந்து, நண்பர்களுடன் நாளை செலவழிக்கலாம். அல்லது, உங்கள் மனதையும், உடலையும் ரிலாக்ஸ் செய்யும் வகையில், ஷாப்பிங் அல்லது ஸ்பா செல்லலாம்.