'மறப்போம் மன்னிப்போம்' என, முறிந்த உங்கள் காதல் உறவை மீண்டும் புதுப்பிப்பது சரியா?
சில நேரங்களில் உங்கள் முன்னாள் காதலருடன், உங்கள் உணர்வையும் உறவையும் புதுப்பித்து கொள்ள நீங்கள் எத்தனிக்கலாம். உங்கள் காதல் வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளை, 'மறப்போம், மன்னிப்போம்' எனக்கருதி, உறவை ஒட்டவைக்க நினைக்கலாம். தனிமையை எதிர்கொள்ள முடியாமல், துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால், ex-ஐப் பற்றி பலரும் நினைப்பார்கள். அது சரியான முடிவாக இருக்க முடியாது எனவும், உங்கள் எண்ணத்தை மறுசீராய்வு செய்ய வேண்டும் எனவும், வல்லுநர்கள் கூறுகிறார்கள். நம்பகத்தன்மை பிரச்சினைகள் எப்போதும் இருக்கும் 'துரோகம்' போன்ற நம்பிக்கை மீறல் காரணமாக உறவு முறிந்திருந்தால், அந்த நம்பிக்கையை, மீண்டும் உங்கள் உறவில் கொண்டுவருவது, பெரிய சவாலாக இருக்கலாம். உங்களால், உங்கள் துணையை நம்ப முடியாவிட்டால், ஆரோக்கியமான, வெற்றிகரமான உறவைப் பேணுவது கடினம்.
நீங்கள் தேடி செல்லும் போது, உங்கள் சுயமரியாதையை நீங்கள் இழக்க நேரிடும்
உறவை காப்பாற்ற போலியாக நடிக்கலாம்: புதுப்பிக்கப்பட்ட உறவில், நீங்கள் இருவரும், சுயத்தை இழந்து போலியாக நடிக்கலாம். உங்கள் துணையின் நடவடிக்கைக்கு நீங்கள், முன்னர் நடந்த கசப்பான நிகழ்வுகளை எண்ணி ரியாக்ட் செய்யலாம். உங்கள் பிரேக்-அப்பிற்கான கோவத்தை உங்களை அறியாமல் வெளிக்கொணரலாம். எமோஷனல் பேகேஜ்: தீர்க்கப்படாத உணர்வுகளான கோபம், மனக்கசப்பு, முந்தைய உறவில் நடந்த எதிர்மறையான நடத்தைகள் ஆகியவற்றை கடந்து செல்வது, சவாலாக இருக்கலாம். உங்கள் மதிப்பை நீங்கள் இழக்கிறீர்கள்: பிரிந்தபிறகும், நீங்கள் மீண்டும் அந்த உறவை தேடி சென்றால், உங்கள் முடிவுகளில் நீங்கள் உறுதியாக இல்லை எனக் கருதப்படும். எதிர்காலத்தில் நீங்கள் இருவரும் மீண்டும் பிரிந்தால், எப்படியும், நீங்கள் மீண்டும் வருவீர்கள் என்று அவர்கள் உங்களை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள்.