ஆன்லைன் டேட்டிங் செய்கிறீர்களா? நேரில் சந்திக்கும் முன் கேட்கப்பட வேண்டிய கேள்விகள்
டிண்டர், பம்பிள் போன்ற ஆன்லைன் டேட்டிங் செயலிகளின் பயன்பாடு அண்மையில் அதிகரித்துள்ளன. ஆனால், அதில் கலந்துரையாடியபின், உங்கள் இணையை நேரில் காணும் முன்னர் நீங்கள் கேட்கவேண்டிய சில கேள்விகள் இதோ: 'படுக்கையில் இருந்து எழுந்திருக்க, உங்களுக்கு உந்துகோலாய் இருப்பது எது?' காபி குடிக்க இருவரும் சந்திக்கும் முன், இதை கேட்பது அவசியம். இந்த கேள்விக்கு கூறப்படும் பதில் மூலம், ஒருவரின் ஆளுமையை பற்றி அறிந்துகொள்ளலாம். 'உங்கள் மிகப்பெரிய முன்மாதிரி யார்?' நேரடியாக, அவர்கள் ரசிக்கும் குணங்களையும், மாற்றி கொள்ள விரும்பும் குணங்கள் யாவை என கேட்காமல், இவ்வாறு கேட்கலாம். அவர்களின் மிகப்பெரிய முன்மாதிரியைப் பற்றி கேட்கப்படும் கேள்வி மூலம், உங்கள் இணை எந்த குணங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார் என தெரிந்து கொள்ளலாம்.
குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் தருபவரா?
,'உங்கள் வார இறுதி இரவுகள் எப்படி இருக்கும்?' "நீங்கள், வார இறுதி நாட்களில் வீட்டில் பொழுதை கழிக்க விருப்பமா அல்லது, மது மற்றும் பார்ட்டி பிரியரா?" என்று நேரடியாக கேட்காமல், இவ்வாறு கேட்பதன் மூலம், அவர் வேலை-தனிப்பட்ட வாழ்க்கை, இரண்டையும் எவ்வாறு சமாளிக்கிறார் என தெரிந்து கொள்ளலாம். 'உங்கள் குடும்பம் எங்கே இருக்கிறது? நீங்கள் அவர்களை அடிக்கடி பார்க்கிறீர்களா?' இக்கேள்வியின் மூலம், குடும்பத்திற்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளலாம். குடும்பத்தினர், அவரின் மேல் எவ்வளவு ஈடுபாடுடன் உள்ளனர் என்பதையும் அறியலாம். இந்த கேள்விகள் மூலம், உங்கள் இருவரின் உறவை, அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்லலாமா வேண்டாமா என முடிவு செய்து கொள்ளலாம்