தினசரி குறட்டையால் அவஸ்தையா? மிளகுக்கீரை உங்களுக்கு உதவும்
குறட்டை என்பது பலருக்கும் ஒரு பெரிய தொல்லையாக இருக்கலாம். அது குறட்டை விடுபவரை மட்டுமின்றி அவர் குடும்பத்தினரின் தூக்கத்தையும் பல நேரங்களில் சீர்குலைக்கும். குறட்டை பொதுவாக தொண்டையில் உள்ள மென்மையான திசுக்களின் அதிர்வால் ஏற்படுகிறது. ஆனால் வறண்ட காற்று மற்றும் தொண்டை அடைப்பு போன்ற காரணிகள் அதை மோசமாக்கலாம். இந்தக் கட்டுரையானது உங்கள் தொண்டையை அமைதிப்படுத்தி காற்றை ஈரப்பதமாக வைத்திருப்பதன் மூலம் குறட்டையைக் குறைக்க உதவும் எளிதான வீட்டு வைத்தியங்களை பகிர்ந்து கொள்கிறது.
மிளகுக்கீரை எண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மை
மிளகுக்கீரை என்பது புதினாவின் ஒரு வகை ஆகும். அதன் எண்ணெயின் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டையின் புறணியை ஆற்றவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் தூக்கத்தின் போது எளிதாக சுவாசிக்கவும் உதவுகிறது. இரவு உறங்கும் முன் வெதுவெதுப்பான நீர் மற்றும் ஒரு துளி பெப்பர்மின்ட் எண்ணெய் கலந்து கொப்பளிப்பதன் மூலம் குறட்டையை குறைக்கலாம். கொப்பளிக்கும் முன்னர் மிளகுக்கீரை எண்ணெயை நன்கு நீர்த்துப்போகச் செய்யுங்கள், அது காரம் நிறைந்தது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால், நாசி மற்றும் தொண்டை சுரப்பு பிசுபிசுப்பு குறைகிறது, குறட்டைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் நீங்கள் தூங்கும் முறையை மாற்றுவதாலும் குறட்டை குறையும். நேராக படுக்காமல், ஒருக்களித்து படுக்கவேண்டும்.