ஒப்பனை இல்லாமல் அழகாக இருப்பது எப்படி; சில டிப்ஸ்
உங்கள் இயற்கை அழகு என்பது மேக்கப் பிரஷ்கள் மற்றும் கன்சீலர்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். ஒப்பனை என்பது ஒரு அழகிய கலை என்றாலும், உங்கள் சருமம் அதன் இயற்கையான பளபளப்பை வெளிப்படுத்த ஒருசில நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம். சுய-பராமரிப்பு நடைமுறைகள் மூலம், உங்கள் சருமத்தின் இயற்கையான பொலிவை வெளிப்படுத்துவது மற்றும் சிரமமின்றி அழகாக இருப்பது எப்படி என்பதைக் கண்டறிய உங்களுக்கு சில டிப்ஸ். ஐஸ் மசாஜ்: ஐஸ் மசாஜ் உங்கள் முகத்தை, குறிப்பாக கண்களைச் சுற்றி இருக்கும் வீக்கத்தை குறைக்கிறது. எனவே, குளிர்ந்த ஜேட் ரோலர் மூலம் உங்கள் சருமத்தில் அழுத்தம் கொடுப்பதனால், எரிச்சல்களைத் தணிக்க உதவும். அந்தப் பகுதியில் உள்ள சருமம் சீரான நிறமாகவும், சேதமடைந்த சருமத் திட்டுகள் இல்லாமல் இருக்கும்.
சரும பாதுகாப்பு டிப்ஸ்
க்ரூமிங்: எப்போதும் உங்களை ப்ரெசென்ட்டபிளாக வைத்திருப்பதற்கு, க்ரூமிங் அவசியம். அவ்வப்போது ஹேர் ஸ்பா சிகிச்சை மற்றும் மெடிக்யூர்/பெடிக்யூர் போன்ற சிகிச்சையை திட்டமிடலாம். விரும்பத்தகாத முடியை அகற்ற விரும்பினால், வாக்சிங் சேஷன் ஒன்றை திட்டமிடுங்கள். தினமும் குளித்து, டியோடரண்ட்/பெர்ஃப்யூம் போட்டுகொண்டு, தலைமுடியை ஸ்டைல் செய்து, புருவங்களை திருத்தி, உங்களை 'பளிச்'சென வைத்துக்கொள்ளுங்கள். ஸ்க்ரப்: உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் ஸ்க்ரப்பிங் அவசியம். இதுதான் உண்மையில் பளபளப்பான சருமத்தின் ரகசியம். பொதுவாக சருமத்தின் மேற்பரப்பில் டெட் செல்கள் சேரும். அதனை அவ்வப்போது ஸ்க்ரப் செய்து நீக்குவதால் புதிய, ஆரோக்கியமான செல்கள் வளர அனுமதிக்கிறது. சருமத்தில் அதிகப்படியான இறந்த செல்கள் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் அகத்தில் அழகு முகத்தில் தெரியும் என்பதை மறக்கவேண்டாம்