NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மென்மையான கூந்தல் கொண்டவரா நீங்கள்?உங்கள் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மென்மையான கூந்தல் கொண்டவரா நீங்கள்?உங்கள் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ் 
    மென்மையான கூந்தல் கொண்டவரா நீங்கள்?உங்கள் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்

    மென்மையான கூந்தல் கொண்டவரா நீங்கள்?உங்கள் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 17, 2023
    04:51 pm

    செய்தி முன்னோட்டம்

    மென்மையான கூந்தல் என்பது பல நேரங்களில் அடர்த்தி குறைவாக காணப்படும். அதாவது, சிறிய விட்டம் கொண்ட முடி இழைகள் இருப்பதால், கூந்தலும் அடர்த்தி குறைவாக தென்படும்.

    இதனால், அவை மெல்லியதாகவும் மென்மையாகவும் தோன்றும்.

    இது மரபணு காரணிகளால் சிலருக்கு சில இயற்கையாகவே அமைகிறது.

    இதில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், மோசமான வாழ்க்கை முறை பழக்கங்கள் அவற்றை மேலும் மோசமாக்கலாம்.

    இதை தவிர்க்க, ஒரு பிரத்யேக முடி பராமரிப்பு வழக்கத்தினை மேற்கொண்டு, நீங்கள் உங்கள் கூந்தலை பேணலாம்.

    card 2

    மெல்லிய முடியைப் புரிந்துகொள்வது

    மென்மையான கூந்தல் கொண்டவர்கள் பெரும்பாலும், மென்மையான, பட்டுப் போன்ற முடியை பெற்றிருப்பார்கள்.

    ஆனால் அதன் மெல்லிய அமைப்பு காரணமாக, எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் அடர்த்தி இல்லாமை போன்ற பிரச்சனைகளுக்கு அதிக வாய்ப்புள்ளது.

    புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாத உணவு, உங்கள் கூந்தலின் அடர்த்தியை குறைத்து, அதை எளிதில் உடையக்கூடியதாக்கும்.

    உங்கள் முடியின் தோற்றத்தை அதிகரிக்க, பல்வேறு முடி பராமரிப்பு பொருட்களும், ஸ்டைலிங் நுட்பங்கள் தற்போது கிடைக்கின்றன.

    card 3

    லேயர் கட் ட்ரை செய்து பாருங்கள்

    முடி வெட்ட பார்லருக்கு செல்லும் போது, இந்த வகை ஸ்டைலை தேர்வு செய்யுங்கள். இது உங்கள் கூந்தலின் அடர்த்தியை மேம்படுத்தி காட்டும்.

    இதன் மூலம், தட்டையான தோற்றத்தைக் குறைக்கலாம்.

    தனிப்பயனாக்கப்பட்ட லேயர் கட் உங்கள் முகத்தை எடுப்பாக காட்டும்.

    card 4

    சேதமடையக்கூடிய முடிக்கு தேவையான பராமரிப்பு 

    மென்மையான அமைப்புடைய கூந்தல், விரைவாக எண்ணெய் பிசுக்கு ஆகிவிடும். எனவே அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டும்.

    இருப்பினும், கூந்தலை அதிகமாக ஷாம்பு போட்டு கழுவுவதைத் தவிர்க்கவும்.

    உங்கள் தலைமுடியை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க, உலர் ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள்.

    இது அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, முடியை அடர்த்தியாக காட்டும். முடி உடைவதைத் தடுக்க, மென்மையான முட்கள் கொண்ட ப்ரஷ்-ஐ பயன்படுத்தி மெதுவாக சீவவும்.

    அதே போல, முடி உலர்த்தும் போது, ட்ரயர் உபயோகிப்பவராக இருந்தால், குறைந்த வெப்ப அமைப்பையும் டிஃப்பியூசரையும் பயன்படுத்தவும். அதிக வெப்பத்தைத் தவிர்க்கவும்.

    card 5

    முடி பராமரிப்பு பொருட்களில் கவனிக்க வேண்டிய முக்கிய பொருட்கள்

    கூந்தலுக்கேற்ற முடி பராமரிப்புப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​வலிமை, அளவு மற்றும் நீரேற்றம் ஆகியவற்றை வழங்கும் பொருட்களுடன் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

    ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட புரதங்கள் சேதமடைந்த முடியை வலுப்படுத்தவும், சரிசெய்யவும் பயன்படுகின்றன.

    பயோட்டின் மற்றும் பி வைட்டமின்கள், முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. கெரட்டின், ஒரு மென்மையாக்கும் புரதம், எனினும் மெல்லிய கூந்தலை வலுப்படுத்துகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முடி பராமரிப்பு

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    முடி பராமரிப்பு

    அதிகப்படியான முடி உதிர்விற்கு காரணமாகும் 5 உணவு வகைகள் ஆரோக்கியம்
    முடி மாற்று அறுவை சிகிச்சையின் வகைகள் என்ன? அவற்றின் அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய சிறு தொகுப்பு மருத்துவ ஆராய்ச்சி
    அடிக்கடி ஷாம்பு உபயோகிப்பீர்களா? இந்த 4 பொருட்கள் உங்கள் ஷாம்பூவில் இல்லையென உறுதி செய்துகொள்ளுங்கள்! ஆரோக்கியம்
    இன்று சர்வதேச விக் நாள்: இந்நாளின் வரலாறும், சில சுவாரஸ்ய தகவல்களும் உடல் ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025