NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / 100% பயனளிக்கும் பழங்கால வீட்டு வைத்திய குறிப்புகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    100% பயனளிக்கும் பழங்கால வீட்டு வைத்திய குறிப்புகள்
    வீட்டு வைத்தியம் 100% பயனளிக்கும் என்பதையும் தாண்டி, இந்த வைத்தியங்களுக்கு சைட்-எஃபெக்ட் இருக்காது

    100% பயனளிக்கும் பழங்கால வீட்டு வைத்திய குறிப்புகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 22, 2024
    04:50 pm

    செய்தி முன்னோட்டம்

    பழங்காலத்திலிருந்து உடல் உபாதைகளுக்கு வீட்டு வைத்தியம் தான் பயன்படுத்தப்பட்டது.

    சிறிய காயங்கள் தொடங்கி, சளி மற்றும் கொப்புளங்களுக்கு என சிகிச்சையளிப்பதற்கு, மக்கள் வீட்டு வைத்தியத்தை நம்பியிருக்கிறார்கள்.

    சில நேரங்களில் மருத்துவர்கள் கூட அவற்றை பரிந்துரைக்கின்றனர்.

    அது 100% பயனளிக்கும் என்பதையும் தாண்டி, இந்த வைத்தியங்களுக்கு சைட்-எஃபெக்ட் இருக்காது.

    காயத்திற்கு மஞ்சள் பத்து, தொண்டை வலிக்கு துளசி கஷாயம் என பல வீட்டு வைத்தியங்களை நீங்கள் கையாண்டிருக்க கூடும்.

    அந்த வகையில், உங்களுக்கு பயன் தரும் மேலும் சில வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ:

    கொப்புளங்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லி: பெரும்பாலான வீடுகளில், பெட்ரோலியம் ஜெல்லி பாட்டிலை நீங்கள் காணலாம். இது உதடுகள் மற்றும் பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளுக்கு உதவுகிறது. ஆனால் இது கொப்புளங்களுக்கும் உதவும்.

    வீட்டு வைத்திய குறிப்புகள்

    தீக்காயங்கள் முதல் அஜீரணம் வரை

    தீக்காயங்களுக்கு கற்றாழை: இரண்டாம் நிலை தீக்காயங்களுக்கான மாற்று சிகிச்சையை விட கற்றாழை நன்றாக குணம் தரும். இருப்பினும், கடுமையான தீக்காயங்களுக்கு, மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.

    வயிற்றுப்போக்குக்கு வாழைக்காய்:வாழைக்காய் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த இயற்கையான மற்றும் பயனுள்ள வழியை வழங்குகின்றன. வாழைக்காய்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன.

    அஜீரணத்திற்கு சோம்பு: சொம்பில் கார்மினேடிவ் பண்புகள் உள்ளன. இது செரிமான அமைப்பிலிருந்து வாயுவை வெளியேற்ற உதவுகிறது. உணவுக்குப் பிறகு ஒரு சிட்டிகை சோம்பை மென்று சாப்பிடுவது இரவு உணவிற்குப் பிந்தைய ஏப்பம் வராமல் தடுக்க உதவும்.

    சைனசிடிஸுக்கு யூகலிப்டஸ் எண்ணெய்: சைனஸைப் போக்க, ஆவி பிடிக்கும்போது, சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து சுவாசித்தல், மூக்கடைப்பு நீங்கும்.

    வீட்டு வைத்திய குறிப்புகள்

    பூச்சி கடி முதல் தூக்கமின்மை வரை

    பூச்சிகடிக்கு ஓட்ஸ்: பூச்சி கடியினால் ஏற்படும் அரிப்பு மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் பெற ஓட்ஸ் பயன்படுத்தலாம். ஓட்மீல் உடன் தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போல, கடித்த இடத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும்.

    இந்தமுறை அசௌகரியம் மற்றும் வீக்கத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

    கண் சோர்வுக்கு வெள்ளரிக்காய்: வெள்ளரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. வீக்கத்தை மற்றும் கண் வலியைக் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    உடல் துர்நாற்றத்திற்கு லாவெண்டர் எண்ணெய்: லாவெண்டர் எண்ணெய் ஒரு இனிமையான நறுமணத்தை வெளியிடுவது மட்டுமல்லாமல், இந்த எண்ணையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் நிரம்பியுள்ளது.

    தூக்கமின்மைக்கு அஸ்வகந்தா: அஸ்வகந்தா என்பது இந்தியாவின் பழமையான மருத்துவ மூலிகையாகும். இது மன அழுத்தம், சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வீட்டு வைத்தியம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    வீட்டு வைத்தியம்

    வாஸ்து நம்பிக்கை உள்ளவர்களா? இந்த செடிகளை, ஒருபோதும் வீட்டிற்குள் வளர்க்காதீர்கள் வாழ்க்கை
    இன்று சர்வதேச மலேரியா தினம் 2023: மலேரியாவுக்கு 5 பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் மலேரியா
    வாய்வு மற்றும் வயிறு உப்புசம் ஆகியவற்றை தவிர்க்க எளிய வீட்டு வைத்தியங்கள்  ஆரோக்கியம்
    ஷேவிங் செய்யும்போது ஏற்படும்  வெட்டு காயங்களுக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள் சரும பராமரிப்பு குறிப்புகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025