உங்கள் ஆளுமை திறமைகளை வளர்க்க சில பயனுள்ள குறிப்புகள்
'ஆளுமை திறன்', 'ஆளுமை வளர்ச்சி' என்ற சொற்களை உங்களது ஆசிரியர்கள், செய்திகள் மற்றும் சுய-குணப்படுத்தும் பதிவுகள் மற்றும் ஆளுமை சம்மந்தப்பட்ட புத்தகங்களில் கேட்டிருப்பீர்கள். ஒரு நபரின் வெற்றி மற்றும் சாதனையில், அவரின் முயற்சியை விட, அவர்களின் ஆளுமையே நிறைய தொடர்புடையது. உங்கள் ஆளுமையை உருவாக்கவும், மேம்படுத்தவும் உதவும் ஐந்து பயனுள்ள குறிப்புகள் இங்கே. செல்ஃப்-லவ்: ஆய்வுகளின்படி, self-love என்பது மகிழ்ச்சி, நிறைவு நேர்மறை எண்ணங்கள் போன்ற நேர்மறையான குணங்களை வளர்க்க உதவுகிறது. உங்கள் மீது நீங்களே, கனிவாகவும், அன்போடும் புரிந்துணர்வாகவும் இருங்கள். நீங்கள் தவறு செய்யும் போதெல்லாம் உங்கள் மீது கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். மாறாக, அந்தத் தவறுகளை ஏற்றுக்கொண்டு, தோல்விகளை வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கருதுங்கள்.
மனதில் கவனம் செலுத்த, சில நிமிடங்கள் தியானம் செய்யவும்
உங்களுக்கு நீங்கள்தான் போட்டி: உங்கள் பலத்தை உணர்ந்து, உங்கள் தனித்துவத்தைக் கொண்டாடுங்கள். மற்றவர்களுடனான போட்டி உங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இது ஆளுமை வளர்ச்சிக்கான மிக முக்கியமான படிகளில் ஒன்றாகும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து உற்சாகமாக இருங்கள்: உற்சாகமாக இருப்பது, உங்களின் அன்றாட பணிகளை சுவாரஸ்யமாக்குவது மட்டுமல்லாமல், உங்களின் மகிழ்ச்சியான, நேர்மறை எண்ணங்கள், மற்றவர்களை, உங்களை நோக்கி இழுக்கும். எனவே, எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நேர்மறையான அணுகுமுறையை பேண முயற்சி செய்யுங்கள். மென்மையாக பேசுங்கள், ஈகோவை விட்டுவிடுங்கள்: எப்பொழுதும் மற்றவர்களை குறை கூறாமல், அவர்களிடம் கண்ணியமாகவும், மென்மையாகவும் பேசுங்கள். குறுகிய எண்ணத்துடன் இருக்காதீர்கள். மேலும், உங்கள் ஈகோவை விட்டுவிடுங்கள். இது மற்றவர்களிடமிருந்து பாராட்டையும், அன்பையும் பெற்றுத்தரும். உங்கள் ஒட்டுமொத்த ஆளுமையை வளர்க்கவும் உதவும்.