மஞ்சளின் மகிமை: ஆரோக்கியமான மற்றும் சுவையான மஞ்சள் கொண்டு புதுவிதமாக சமைக்கலாமா?
இந்திய சமையலறையில் கட்டாயம் இருக்கக்கூடிய ஒரு மசாலா பொருள் இந்த மஞ்சள். மஞ்சள் சமையல் ருசிக்கு மட்டுமின்றி, அதன் அழற்சி எதிர்ப்பு நன்மைகளுக்காகவும் அறியப்படுகிறது. இந்திய உணவுகளில் அதிலும் குறிப்பாக தென்னிந்திய உணவுகளில் கிட்டத்தட்ட அனைத்து உணவிற்கும் மஞ்சள் சேர்க்கப்படும். நிறத்திற்காக மட்டுமின்றி, ஆரோக்கியம் மற்றும் சுவைக்காகவும் மஞ்சள் ஒரு சிட்டிகை அளவேனும் சேர்க்கப்படும். மஞ்சளின் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இரண்டையும் உறுதியளிக்கும் சில வித்தியாசமான மஞ்சள் கலந்த காய்கறி உணவுகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
மஞ்சளின் ஆரோக்கியத்தை தரும் உணவுகள்
கோல்டன் எல்லோவ் காலிஃபிளவர் ஸ்டீக்ஸ்: காலிஃபிளவர் பூக்களோடு, மஞ்சள்தூள், துண்டுதுண்டாக வெட்டப்பட்ட பூண்டு,மற்றும் மிளகுதூள் ஆகியவற்றைக் கலந்து காலிஃபிளவர் மென்மையாக மாறும் வரை வதக்கவும். இந்த உணவு பார்வைக்கு மட்டும் அல்ல, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது. தேங்காய் மஞ்சள் சூப்: மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு பண்புடன் தேங்காய்ப்பாலின் புண்களை ஆற்றும் திறனும் சேர்ந்துள்ள இந்த கிரீமி சூப்பில், இஞ்சி, சத்து நிறைந்த கேரட் மற்றும் சக்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றையும் சேர்க்கலாம். பருப்பு குழம்பு: சிம்பிளான இந்த குழம்பிற்கு வேகவைத்து மசித்த பருப்புடன், மஞ்சள், பெருங்காயம், சீரகம் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறலாம். மஞ்சள் பால்: இருமலுக்கு இதமான மஞ்சள் மற்றும் பனங்கற்கண்டு கலந்த மசாலா பால் பருகலாம்.