LOADING...
தினமும் காலையில் காபி குடிப்பவரா நீங்கள்? இந்த 3 தவறுகளை மட்டும் செய்யாதீங்க
தினமும் காலையில் காபி குடிப்பவர் செய்யக் கூடாத தவறுகள்

தினமும் காலையில் காபி குடிப்பவரா நீங்கள்? இந்த 3 தவறுகளை மட்டும் செய்யாதீங்க

எழுதியவர் Sekar Chinnappan
Mar 21, 2026
07:05 pm

செய்தி முன்னோட்டம்

நம்மில் பலருக்குக் காலை பொழுது ஒரு கப் காபி இல்லாமல் விடிவதே இல்லை. காபி உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற பொதுவான கருத்துக்கு மத்தியில், அது உங்கள் குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்கிறார் எய்ம்ஸ் மற்றும் ஹார்வர்டில் பயின்ற பிரபல செரிமான மண்டல நிபுணர் சௌரப் சேத்தி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காபியை எப்படிச் சரியான முறையில் குடிக்க வேண்டும் என்பது குறித்து அவர் பகிர்ந்துள்ள முக்கியக் காரணிகள் இதோ:

சிறந்த காபி

மிகச்சிறந்த காபி மற்றும் குடிப்பதற்கு ஏற்ற சரியான நேரம்

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை 'பில்டர் செய்யப்பட்ட பிளாக் காபி' தான் முதலிடம். இதில் உள்ள 'பாலிபினால்கள்' உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகின்றன. பலரும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், தூங்கி எழுந்த 60 முதல் 90 நிமிடங்களுக்குப் பிறகு காபி குடிப்பதே சிறந்தது. வெறும் வயிற்றில் காபி குடிப்பதைத் தவிர்ப்பது அமிலத்தன்மை பிரச்சனையைத் தடுக்கும். ஒரு நாளைக்கு 1 முதல் 3 கப் வரை காபி குடிப்பது பெரும்பாலானவர்களுக்குப் பாதுகாப்பானது மற்றும் ஆரோக்கியமானது. இது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

தவிர்க்க வேண்டியவை

தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்

சர்க்கரையைத் தவிர்க்கவும்: காபியில் சர்க்கரை அல்லது செயற்கை இனிப்புகளைச் சேர்ப்பது அதன் நன்மைகளைக் குறைத்துவிடும். இரவு நேரத்தைத் தவிர்க்கவும்: தூங்குவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன் காபி குடிப்பது உங்கள் உறக்கத்தைப் பாதிக்கும். ஆர்கானிக் காபி: முடிந்தவரை ரசாயனங்கள் இல்லாத ஆர்கானிக் காபி கொட்டைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. உங்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் அல்லது 'ரிஃப்ளக்ஸ்' பிரச்சனை இருந்தால், லோ-ஆசிட் காபி, கோல்ட் ப்ரூ அல்லது கஃபைன் நீக்கப்பட்ட காபியைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. டாக்டர் சேத்தி தனது பதிவில், கல்லீரல் கொழுப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு பிளாக் காபியை 10க்கு 10 மதிப்பெண் கொடுத்துப் பரிந்துரைக்கிறார். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரலைப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Advertisement