வெள்ளிக் கொலுசு அணிவதன் பின்னணி: ஆச்சரியங்கள் மற்றும் நன்மைகள்
இந்தியாவில் பெண்கள் வெள்ளிக் கொலுசு அணிவது மரபு. பண்டைய காலங்களில் ஆண்களும் வெள்ளியால் செய்யப்பட்ட தண்டை அணிந்தனர். வெள்ளியால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிவதால் பல நன்மைகள் உள்ளன என ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன. பொதுவாக பெண்கள் தங்க நகையை தேர்வு செய்து அணிந்தாலும், கால்களுக்கு தங்கத்தை அணிவதில்லை. கால்களை அலங்கரிக்க வெள்ளி கொலுசும், மெட்டி அணிவதும் தான் மரபு. காலில் கொலுசு அணிவதற்கான காரணங்கள் கலாச்சாரத்திற்கும் பழக்க வழக்கங்களுக்கும் அப்பால் உடல் நலனும் ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாக உள்ளன. வெள்ளிக்கு உடலிலிருந்து வெளியேறும் ஆற்றலை மீண்டும் கிரஹிக்க வாய்ப்பு உண்டு. நமது உடலின் ஆற்றலானது கை மற்றும் கால்கள் வழியாகவே வெளியேறும் என்பதால், கால்களில் வெள்ளி நகைகள் அணியப்படுகிறது.
பெண்கள் கால்களில் கொலுசு அணிவதால் ஏற்படும் நன்மைகள்
பொதுவாக பெண்கள் பல மணி நேரம் சமையலறையில் நின்ற படி சமைப்பதனால் கால்களில் வலி மற்றும் வீக்கம் ஏற்படக்கூடும். இவற்றை சமாளிக்க, கால்களில் வெள்ளிக் கொலுசு அணிதல், நல்ல ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதோடு, பாதங்களை பாதுகாப்பதில் மற்றும் மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், முக்கிய சுரப்பிகளை சமநிலையில் வைத்திருக்கவும், கருப்பையை ஆரோக்கியமாகப் பேணவும் வெள்ளி கொலுசு உதவுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல், பெண்களின் கருப்பையுடன் தொடர்புடைய முக்கியமான நரம்பு, காலின் விரலில் இருப்பதால், அதில் மெட்டி அணிவதால், கருப்பை ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளியில் இவற்றை அணிவதால், உடலின் சூட்டை தணிக்கும் எனவும் கூறப்படுகிறது.