கட்டிப்புடி வைத்தியத்தின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
'வசூல்ராஜா MBBS' திரைப்படத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் கட்டிப்புடி வைத்தியத்தின் மகத்துவத்தை படம்பிடித்து காட்டி இருப்பார்.
கட்டிப்பிடித்தல் என்பது பிணைப்பு, ஆறுதல் மற்றும் கவனிப்பு ஆகியவற்றின் உலகளாவிய மொழியாகும்.
நாம் தேடும் மனநிறைவையோ, பாசத்தையோ அல்லது ஆதரவையோ வெளிக்காட்டுவது கட்டிபிடித்தலின் வெளிப்பாடு. அதன் மூலம் ஒருவர் மேல் இருக்கும் ஒரு ஆழமான அரவணைப்பு, நெருக்கம், மற்றும் மென்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. ஆனாலும், அதன் மூலம் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஆராய்வோம்.
மன அழுத்தத்தைக் குறைக்கிறது: ஒரு நண்பர் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் அவர்களின் வாழ்க்கையில் கடினமான அல்லது விரும்பத்தகாத காலகட்டத்தை சந்திக்கும் போது அவரை கட்டிப்பிடிக்கவும். ஒருவரைக் கட்டிப்பிடித்து ஆறுதல்படுத்துவது அந்த நபர் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
card 2
கட்டிபிடித்தல் அமைதி மற்றும் பாதுகாப்பு உணர்வை உருவாக்குகிறது
தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவும்: மன அழுத்தம் நம்மை வைரஸ் தொற்றுகளுக்கு ஆளாக்குகிறது. ஆனால், தொடுவதும் கட்டிப்பிடிப்பதும் ஆக்ஸிடாஸின் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களை மாற்றியமைப்பதன் மூலம், நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தியை கொண்டுள்ளது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்: ஒரு ஆய்வில், தொடர்ந்து கட்டிப்பிடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று கண்டறிந்துள்ளது. கட்டிப்பிடிப்பதன் மூலம், ஆக்ஸிடாஸின் எழுச்சி, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, உங்கள் இதயத்தின் அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது: அணைத்துக்கொள்வதால், நமது தூக்க-விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்தும் முக்கியமான ஹார்மோனான கார்டிசோல் உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால், ஆழ்ந்த உறக்கம் ஏற்படுகிறது. கூடுதலாக, குறைந்த கார்டிசோல் அளவு குறைந்த மன அழுத்தத்தையும் குறிக்கிறது,