Page Loader
வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் உடலில் ஏற்படும் நன்மைகளின் பட்டியல்
உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் வெந்நீர்

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் உடலில் ஏற்படும் நன்மைகளின் பட்டியல்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 10, 2023
06:24 pm

செய்தி முன்னோட்டம்

வெந்நீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதை எப்போது, எவ்வாறு குடிக்க வேண்டும் என பலருக்கும் தெரியாது. எப்போதும் வெந்நீர் குடிப்பதால் எடை குறைந்து விடும் என்பது முட்டாள்தனம். ஆரோக்கியமான உணவு பழக்கமும், தொடர் உடற்பயிற்சி மட்டுமே உடல் எடைக்கு நன்மை பயக்கும். வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியல் இதோ: நீரேற்றத்தை மேம்படுத்துகிறது: சூடான நீர், உடலில் உள்ள நச்சுகளுக்கு எதிராக செயல்பட்டு, உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. உணவுக்குப் பிறகு சூடான நீரை குடிப்பதால், செரிமானத்தின் போது இழந்த திரவங்களை நிரப்பவும், உங்கள் உடலை ஹைட்ரேட் செய்யவும் உதவுகிறது.

வெந்நீர்

செரிமானத்திற்கு உதவும் வெந்நீர்

செரிமானத்திற்கு உதவுகிறது: வெந்நீர் குடிப்பதால், உணவு விரைவாகவும், திறமையாகவும் செரிக்க படுகிறது. அதன் மூலம், உடலுக்கு ஊட்டச்சத்துகள் எளிதாக விநியோகிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. எடை இழப்பிற்கு உதவுகிறது: உணவு உண்பதற்கு முன் வெந்நீரைக் குடிப்பதால், வளர்சிதை மாற்றம் 32 சதவிகிதம் அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பீரியட்ஸ் வலியை குறைக்கிறது: உணவுக்குப் பிறகு வெந்நீரை குடிப்பதால், கருப்பையின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அதனால், தசைகள் தளர்வாகிறது. இதனால், பீரியட்ஸ் வலி குறைகிறது. வெந்நீரை, மருத்துவத்தில், 'vasodilator' எனக்குறிப்பிடுகிறார்கள். அதாவது, இரத்த நுண்குழாய்களை விரிவுபடுத்தி, அதன் மூலம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது எனபது பொருள்.