காபியில் சிக்கரி சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
செய்தி முன்னோட்டம்
தென்னிந்தியாவில், பரவலாக பலரது காலை சூடான காபியோடு தான் துவங்குகிறது.
அந்த நறுமணம், சுவையும் பலரையும் கவர்ந்திழுக்க கூடியது. ஆனால், வறுத்த காபி கொட்டைகளுடன் சேர்க்கப்படும் சிக்கரி கலவையே இந்த வாசனைக்கும் சுவைக்கும் முக்கிய காரணம்.
சரி, சிக்கரி என்றால் என்ன? அது எதற்காக கலக்கப்படுகிறது?
சிக்கரி, உலர்ந்த, அரைக்கப்பட்ட மூலிகை வேர்.
பல்வேறு தேயிலை இலைகள் மற்றும் மூலிகைகள் இணைந்து தனித்துவமான தேயிலை சுவைகளை உருவாக்குவது போல, ஒரு தனித்துவமான கலவையை உருவாக்க காபி பொடியுடன் கலக்கப்படுகிறது.
இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தேவைக்காக முதலில் காபியில் சேர்க்கப்பட்டது என்று கூறப்படுகிறது. 1800 களின் முற்பகுதியில் நெப்போலியன் காலத்தில், ஐரோப்பாவை பூர்வீகமாக கொண்ட இந்த மூலிகை காபியில் சேர்க்கப்பட்டது.
card 2
சிக்கரியின் ஆரோக்கிய நன்மைகள்
சிக்கரி ரூட் இன்யூலின் எனப்படும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அறியப்படும் ஒரு ப்ரீபயாடிக் ஃபைபர் நிறைந்ததாகும்.
மேலும் அதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
அதனால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சிக்கரியின் காஃபின் இல்லாத தன்மை, குறைந்த காஃபின் அளவை விரும்புவோருக்கு சிறநத காபி-ஐ வழங்குகிறது.
இந்த வேர், பாரம்பரியமாக கல்லீரலை சுத்தீகரித்து, அதில் தேங்கி இருக்கும் நச்சுத்தன்மையை நீக்க பயன்படுத்தப்படுகிறது.
சிக்கரி பெரும்பாலும் ரோபஸ்டா காபி பீன்ஸ் உடன் கலக்கப்படுகிறது. ரோபஸ்டா பீன்ஸ் ஒரு வலுவான மற்றும் அதிக கசப்பான சுவையை கொண்டிருப்பதால், அவை சிக்கரியோடு கலக்கும் போது அமோக சுவை பெறுகிறது.காபி-க்கு-சிக்கரி விகிதம் பரவலாக மாறுபடும்-2:1 (சிக்கரிக்கு இரண்டு பாகங்கள் காபி), 3:1 அல்லது 4:1.