Page Loader
எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த கோர்டன் ராம்சே! இது தான் பட்டர் சிக்கனா?
விமர்சனங்களை ஈர்த்த கோர்டன் ராம்சேயின் பட்டர் சிக்கன் வீடியோ

எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த கோர்டன் ராம்சே! இது தான் பட்டர் சிக்கனா?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2023
08:28 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல சமையல் நிபுணரான கோர்டன் ராம்சே அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியிருந்தார். ஆனால் இந்த குறிப்பிட்ட வீடியோ, ரசிகர்களால் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. ராம்சே உலகம் முழுவதும் பிரபலமான சமையல்காரர். அவரின் வீடியோ பதிவுகள் மக்கள் பலரால் ரசிக்கப்பட்டு வரும். சமீபத்தில் அவர் பட்டர் சிக்கன் செய்வது எப்படி என்று ஒரு வீடியோவும், வீடியோவின் இறுதியில், அந்த பட்டர் சிக்கனை சாதத்துடன் உண்பது போல முடிவடைந்து உள்ளது. இதற்கு பதிலளித்த இன்ஸ்டாகிராம் பயனர்களில் ஒருவர், "இது பட்டர் சிக்கன்-ஏ இல்லை!" எனவும், மற்றவரோ, "பட்டர் சிக்கன் 'curry'யா? ப்ரோ! முதலில், அது பட்டர் சிக்கன் கூட இல்லை, இரண்டாவதாக, அனைத்து இந்திய உணவுகளும் 'curry' என்று அழைக்கப்படுவதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

கோர்டன் ராம்சேயின் பட்டர் சிக்கன் வீடியோ