Loading...
பெப்சிகோ மீது FSSAI குற்றச்சாட்டு: எனர்ஜி டிரிங்க் பெயரில் நுகர்வோருக்கு ஏமாற்றமா? முழு விபரம்
பெப்சிகோ மீது FSSAI குற்றச்சாட்டு

பெப்சிகோ மீது FSSAI குற்றச்சாட்டு: எனர்ஜி டிரிங்க் பெயரில் நுகர்வோருக்கு ஏமாற்றமா? முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 05, 2026
01:05 pm

செய்தி முன்னோட்டம்

பெப்சிகோ நிறுவனம் தனது ஸ்டிங் மற்றும் அட்ரினலின் ரஷ் பானங்களை எனர்ஜி டிரிங்க் என்ற பெயரில் சந்தைப்படுத்தி நுகர்வோரைத் தவறாக வழிநடத்துவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. காஃபின் கலந்த பானங்களுக்கான விதிமுறைகளை அறிந்திருந்தும் பெப்சிகோ இந்த தவறான விளம்பரங்களை செய்துள்ளது. முறையான பாதுகாப்புத் தரநிலைகள் வரையறுக்கப்படாத ஒரு பிரிவின் கீழ் இந்த பொருட்களை அந்நிறுவனம் திட்டமிட்டு விற்பனை செய்து வந்துள்ளது. FSSAI அமைப்பின் இந்த குற்றச்சாட்டு வர்த்தக உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லேபிள் விதிகள்

சட்டப்பூர்வ லேபிள் விதிகளும் எனர்ஜி டிரிங்க் என்ற சொல்லுக்கான தடையும்

காஃபின் அடங்கிய பானங்களுக்குப் பொருந்தக்கூடிய கட்டாய லேபிளிங் தேவைகளைப் பெப்சிகோ சரியாகப் பின்பற்றி வந்தது.

இதனால் இப் பொருட்களின் சரியான வகைப்பாடு குறித்து அந்நிறுவனம் நன்கறிந்திருந்தது என்பது தெளிவாகிறது.

இருந்தபோதிலும் எனர்ஜி டிரிங்க் என்ற சொல்லைப் பயன்படுத்துவது நுகர்வோரைத் தவறாக வழிவகுக்கும் என FSSAI சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி இச்சொல்லைப் பொருளின் பெயராகப் பயன்படுத்தக் கூடாது என FSSAI உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற வழிகாட்டுதல்

12 மாத கால அவகாசம் நிராகரிப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்

இருப்பில் உள்ள பழைய பேக்கேஜிங் பொருட்களைப் பயன்படுத்த 12 மாத அவகாசம் கேட்ட பெப்சிகோவின் கோரிக்கையை FSSAI நிராகரித்துள்ளது.

அதிக சர்க்கரை மற்றும் காஃபின் கொண்ட பொருட்களைக் குழந்தைகள் உட்கொள்வதிலிருந்து பாதுகாப்பதே முதன்மையானது என ஆணையம் தெரிவித்தது.

வணிக நிறுவனங்களின் நிதி இழப்பைக் காட்டிலும் பொதுமக்களின் ஆரோக்கியமே முக்கியமானது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

FSSAI தனது 57 பக்க விரிவான வாக்குமூலத்தில் இந்த காரணியை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

ADVERTISEMENT

இடைக்காலத் தடை

டெல்லி உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவும் அடுத்தகட்ட விசாரணையும்

உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் இப் புதிய உத்தரவை எதிர்த்துப் பெப்சிகோ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது.

வழக்க விசாரித்த நீதிபதி அமித் மகாஜன் FSSAI-ன் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இருப்பினும் அடுத்தகட்ட விசாரணை வரை புதிய பேட்ச் தயாரிப்புகளில் எனர்ஜி டிரிங்க் என்ற சொல்லைப் பயன்படுத்த பெப்சிகோவிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த கடுமையான விவகாரம் தொடர்பாக பெப்சிகோ தரப்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ADVERTISEMENT