உடல் பருமனாக இருப்பவர்கள், கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில பழச்சாறுகள்
உடல் ஆரோக்கியத்திற்கு பழங்களும், காய்கறிகளும் அதிகம் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. அதிலும் இந்த கோடை காலத்தில், உடலில் ஏற்படும் தாகத்தை தணிக்கவும், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும், அனைவரும் பழ ஜூஸ்களை விரும்பி குடிப்பதுண்டு. ஆனால், நீங்கள் பருமனான உடல் வாகு கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில ஜூஸ்கள், என மருத்துவர்கள் பரிந்துரைப்பது: ஆரஞ்சு ஜூஸ்: ஆரஞ்சு பழத்தில், வைட்டமின் சி, பொட்டாசியம், 15% டிவி தியாமின் மற்றும் 15% டிவி ஃபோலேட் மற்றும் பிற பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. அதோடு, 24 கிராம் சர்க்கரையும் உள்ளது. நீங்கள் எடைக்குறைப்பிற்காக முயன்று வருகிறீர்கள் என்றால், இந்த பழத்தின் ஜூஸ்-ஐ தவிர்க்கவும்.
வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடுவது தான் நல்லது
மாம்பழ ஜூஸ்: மற்ற பழங்களை விட மாம்பழத்தில் அதிக கலோரிகள் உள்ளன. அதனால் உடல் எடை கூறும். அதன் சாற்றில் அதிக சர்க்கரை மற்றும் குறைந்த நார்ச்சத்து உள்ளது. அதாவது மாம்பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகவும் அதிகமாக இருப்பதால், ரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பழம் உகந்ததல்ல. அவகேடோ ஜூஸ்: இந்த பழத்திலும், கலோரிகளும், வைட்டமின்களும் மற்றும் சில தாதுக்களும் நிறைந்து உள்ளன. இது உங்கள் எடையை அதிகரிக்க செய்யும் குணம் நிறைந்தது. வாழைபழ ஜூஸ்: பனானா மில்க்க்ஷேக், ருசியானதுதான். எனினும் இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால், வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. ஜூஸ் வடிவில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை தராது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.