சிறுநீரக கல் நீக்கம் முதல் எடையிழப்பு வரை அனைத்திற்கும் பயன்படும் வாழைத்தண்டு!
வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும், அதன் பூவில் இருந்து தொடங்கி, தண்டு வரை மருத்துவ குணங்களால் நிறைந்திருக்கும் என்பதை பலர் அறிந்திருப்பார்கள். குறிப்பாக இந்த வாழைத்தண்டினை உணவில் சேர்த்தால் உடலுக்கு பல ஆரோக்கிய பலன்களை வழங்குகின்றன. இந்த செய்தியில், வாழைத்தண்டில் பயன்கள் மற்றும் அதன் செய்முறை பற்றி ஒரு பார்வையை பெறலாம். சிறுநீரக கற்களை வெளியேற்றும்: வாழைத்தண்டின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று, சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றுவது. இது உடலில் சிறுநீர் உற்பத்தியை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் சிறுநீரகங்களில் உள்ள கழிவுகள் மற்றும் கிருமிகள் நீக்கப்படுகின்றன. செய்முறை: வாழைத்தண்டு ஜூஸ் மற்றும் எலுமிச்சை பழ சாறு கலந்து குடித்தால், சிறுநீரக கற்களை உருவாகாமல் தடுக்கும்.
ஆரோக்கிய பலன்கள்
சர்க்கரை நோயாளிகளுக்கு: வாழைத்தண்டில் உள்ள துவர்ப்பு சுவை, சர்க்கரை நோயாளிகளுக்கான மிகுந்த நன்மையை அளிக்கிறது. இதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் வைட்டமின் பி6, இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம், சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். செய்முறை: சர்க்கரை நோயாளிகள், வாழைத்தண்டை வாரம் 2-3 முறை பொரியலாக சாப்பிடுவது, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். மலச்சிக்கல்: வாழைத்தண்டின் நார்ச்சத்து, குடல் இயக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை எளிதில் குணப்படுத்த உதவுகிறது. எடை: வாழைத்தண்டின் நார்ச்சத்து, உடலில் நீண்ட நேரம் பசியின்மை கொடுக்கிறது. இதன் மூலம், உடல் எடை குறைக்க உதவும்.
ஆரோக்கிய பலன்கள்
ரத்த அழுத்தம்: வாழைத்தண்டில் அதிகமாக உள்ள பொட்டாசியம், ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவி செய்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. கெட்ட கொழுப்பை கரைக்கும்: வாழைத்தண்டில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6, இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளின் ஆபத்தைக் குறைக்க உதவுகிறது. சிவப்பணுக்கள்: ரத்த சோகையால் ஏற்பட்ட இரத்த சிவப்பணுக்கள் குறைவை, வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதன் மூலம் அதிகரிக்க முடியும்.