நண்பர்கள் தினம்: நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சில சாகச விளையாட்டுகள்
செய்தி முன்னோட்டம்
நட்பு என்பது ஒரு மனிதனை உயிர்ப்புடன் இருக்க செய்யும் ஒரு அழகிய உறவாகும். இந்த உறவில் ஈடுபட வயதோ, பாலினமோ, இடம் பொருளோ எதுவுமே தடையாக இருந்ததில்லை, இருக்க போவதும் இல்லை!
பேனா நட்பு தொடங்கி, தற்போது உள்ள இணையதள நட்பு வரை காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் இந்த நட்புறவு.
இந்த நண்பர்கள் தின வாரத்தில், உங்கள் நண்பரோடு அல்லது உங்கள் நண்பர்கள் குழுவோடு, நீங்கள் சில சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம். இதன் மூலம் இந்த ஆண்டின் நண்பர்கள் தினத்தை மறக்கமுடியாத நினைவாக மாற்றுங்கள்!
card 2
எஸ்கேப் ரூம், போர்டு ரூம்:
எஸ்கேப் ரூம்: தற்போது அநேக மெட்ரோ நகரங்களில் இந்த 'எஸ்கேப் ரூம்' திறக்கப்பட்டுள்ளது. புதிர்கள் அடங்கிய ஒரு திகில் அறை..ஒரு புதிருக்கு விடையளித்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்ற நிபந்தனை..நேரம் செல்ல செல்ல குறையும் மதிப்பெண்கள்..என ஒரு த்ரில்லிங் அனுபவத்தை பெற இந்த எஸ்கேப் ரூம்களுக்கு செல்லலாம்
போர்டு ரூம்: வித்தியாசமான போர்டு கேம்கள் நிரம்பிய விளையாட்டு இடம். வயது வித்தியாசமின்றி யாரும் அணுக கூடிய ஒரு இடம்தான் இந்த போர்டு ரூம். அங்கேயே ஸ்னாக்ஸ் சாப்பிட்டு கொண்டே, அரட்டை அடித்துக்கொண்டே உங்கள் வயதிற்கு ஏற்றபடி விளையாட்டை தேர்வு செய்யலாம். நாள் முழுவதும் குதூகலமாக கழிக்கலாம்.
CARD 3
கயக்கிங்,ஸ்கூபா டைவிங்:
கயக்கிங்: கடல் அலைகளில் விளையாடப்படும் சாகச விளையாட்டு இது. ஒரு சிறிய படகு, கைகளில் துடுப்பு, பொங்கி வரும் கடல் அலை..கேட்கும் போதே த்ரில்லிங்காக இருக்கிறதா? தமிழ்நாட்டில் சென்னை, பாண்டிச்சேரி நகரங்களில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடல் சாகச பயிற்சியாளர்களை அணுகி, உங்கள் தேவைக்கேற்ப முன்னரே புக்கிங் செய்துகொண்டு, இந்த நண்பர்கள் தினத்தை கடலில் கொண்டாடுங்கள்!
ஸ்கூபா டைவிங்: பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் போன்ற இடங்களில், இந்த ஸ்கூபா டைவிங் செய்யலாம். குழுவாகவோ, தனி நபராகவோ சென்று ஆழ்கடலின் அதிசயங்களை காணலாம்.
card 4
ராக் கிளைம்பிங், பைக் ரைட்:
ராக் கிளைம்பிங்: கரடுமுரடான மலைகளில் ஏறும் விளையாட்டு இது. வலுவான உடற்திறமை கொண்டவர்கள் முயற்சிக்கலாம். மலைகள் நிறைந்த ஊர்களில், இவ்வகை விளையாட்டு, இயற்கையான சூழலில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் மலைகளே இல்லாத ஊர்களிலோ, செயற்கையாக உருவாக்கப்பட்ட மலை போன்ற சுவற்றில் கயிறு கட்டி ஏறலாம். தற்போது நிறைய த்ரில் பார்க்குகள் இவ்வகை விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளன.
பைக் ரைட்: நம்மூரில் நிறைய பைக் ரைடர்ஸ் கிளப்கள் உள்ளன. அவர்கள் பல நகரங்களுக்கு பைக் ட்ரிப் செல்வதுண்டு. குறிப்பாக பெங்களூரில் இருந்து கோவா செல்லும் வழி, லெஹ் - லடாக் மலை பாதை போன்றவை பைக் ஓட்ட பிரியப்படுபவர்களுக்கு ஏற்ற இடம். அதிலும் உங்கள் நண்பர்கள் பட்டாளத்துடன் இங்கே சென்றால் அது ஒரு மறக்கமுடியாத அனுபவம் தானே?!
card 5
கேம்பிங்,ட்ரெக்கிங்:
கேம்பிங்: மலைகளில், இயற்கை காற்றோடு, இரவு வானில், விண்மீன்களை பார்த்து கொண்டே இயற்கையோடு கழிப்பது ஒரு தனி சுகம். இயற்கை பிரியர்கள் கூட்டாக, கூர்க், கொடைக்கானல் போன்ற இடங்களில், மக்கள் நடமாட்டம் அதிகமற்ற பகுதிகளில், இயற்கையோடு ஒரு இரவை கழிக்கலாம். நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து கொண்டே, பார்பெக்யூ அடுப்பில் உங்களுக்கு பிரியப்பட்ட உணவை சமைத்து சாப்பிட்டு, ஆடல் பாடலுடன் இந்த நண்பர்கள் தினத்தை கொண்டாடுங்கள்.
ட்ரெக்கிங்: தற்போது பலரும் செல்ல பிரியப்படுவது இந்த ட்ரெக்கிங். அடர்ந்த காட்டின் ஊடே ஒரு பயணமோ, அல்லது மலையேற்றமோ..பொதுவாக யாரும் செல்லாத பாதையில் பயணப்பட்டு, அங்கிருக்கும் இயற்கை காட்சிகளை ரசிப்பது தனி சுகம்.
card 6
பாரா கிளைடிங்,ஸ்கீயிங்:
பாரா கிளைடிங்: வெளிநாடுகளில் மட்டுமே இருந்த இந்த விளையாட்டு, தற்போது இந்தியாவிலும் வந்துவிட்டது. எங்கோ உச்சியிலிருந்து, குதித்து, ஒரு பாராச்சூட் துணையுடன், பறவையை போல பறப்பது உண்மையாகவே வாழ்க்கையில் ஒரு முறை அனுபவிக்க வேண்டிய ஒரு த்ரில் விளையாட்டு தான்.
ஸ்கீயிங்(Skiing): பனிச்சறுக்கு விளையாட்டு என்று அழைக்கப்படும் ஸ்கீயிங், பொதுவாக பனிமலைகளில் தான் விளையாடப்படும். இந்தியாவில் மணாலி, காஷ்மீர் போன்ற ஊர்களில் இவ்வகை பனி விளையாட்டுகள் மிக பிரபலம்.