உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்டுள்ள 6 நாடுகள்
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் டுகளைக் கொண்டுள்ளதாக ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
194 உலக நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதித்து, இந்த நாடுகள் சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.
இந்த நாடுகளைத் தொடர்ந்து பின்லாந்து, நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை 193 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதியை வழங்குகின்றன.
62 நாடுகளுக்கு விசா இல்லாதஅனுமதியை வழங்கி, இந்த குறியீட்டின் அடிப்படையில் இந்தியா 85 வது இடத்தில் உள்ளது
இந்தியா
மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து
இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு விசா இல்லாதஅனுமதியை இந்திய பாஸ்போர்ட் வழங்குகிறது.
தென்னாப்பிரிக்கா (55வது), மாலத்தீவுகள் (58வது), சவூதி அரேபியா (63வது), சீனா (64வது), தாய்லாந்து (66வது), இந்தோனேஷியா (69வது), உஸ்பெகிஸ்தான் (84வது) போன்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கி நிற்கிறது.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 106வது இடத்திலும், இலங்கை 101வது இடத்திலும், வங்கதேசம் 102வது இடத்திலும், நேபாளம் 103வது இடத்திலும் உள்ளன.
192 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதியை வழங்கி, லக்சம்பர்க், அயர்லாந்து, டென்மார்க் மற்றும் ஆஸ்திரியாவுடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.