உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள், சத்தான உணவை எடுக்கிறதா என்பதை உறுதி செய்ய அவ்வப்போது தவறி விடுகிறார்கள் பெற்றோர்கள். நம் கண்காணிப்பில் இல்லாதபோது, பிள்ளைகள் உணவை முழுவதுமாக சாப்பிட்டால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் பெற்றோர்கள். இருப்பினும், குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்க, நீங்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை: நூடுல்ஸ்: '2 மினிட்ஸ்' நூடுல்ஸ் என்பது தற்போது அனைவரது சமையலறையில் இருக்கும் பொருளாகிவிட்டது. அவை உடலுக்கு தீமை விளைவிக்கும் என மருத்துவர்கள் குறிப்பிட்டாலும், அது வேலையை சுலபமாகி விடுகிறது என்பதால், பலரும் அதை தேர்வு செய்வதுண்டு. சத்தை கூட்டுவதற்கு, அதில் காய்கறிகளை சேர்க்கலாம் என்ற எண்ணம் கூடாது. இந்த இன்ஸ்டன்ட் உணவில், ரசாயன கலவைகள் இருப்பதால், குழந்தைகள் நலனுக்கு கேடு.
எண்ணையில் பொறித்த உணவுகளை தவிர்க்கவும்
வறுத்த உணவுகள்: எண்ணையில் பொறித்த Fried உணவுகளான, French fries, உருளை சிப்ஸ், chicken 65 போன்ற வறுத்த உணவுகள், பொதுவாக குழந்தைகளால் விரும்பப்படும். இருப்பினும், அவற்றை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியமற்றது. இது எடை அதிகரிப்பு மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சாக்லேட்டுகள்,கேக்குகள்: பள்ளிக்கு, snacksக்காக, சாக்லேட் தராதீர்கள். சாக்லேட்டுகளில் நிறைய சர்க்கரைதான் உள்ளது. ஊட்டச்சத்து எதுமே இல்லை. கேக்குகளில், செயற்கை நிறங்கள் மற்றும் Transfat நிறைந்துள்ளது. இது எதிர்காலத்தில், குழந்தைகளுக்கு இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும். பாட்டில் ஜூஸ்: Tetra Packகுகளில் விற்கப்படும், ஜூஸ்களில், சிறிதளவே பழச்சாறும், அதிகளவில் சர்க்கரையும் தான் உள்ளது. மேலும் பதப்படுத்த அதில் ரசாயனங்களும் கலக்கப்படுகிறது. அதற்கு பதிலாக இயற்கையான பழங்களும், பழச்சாறுகளும் தரலாம்