விமான பயணத்திற்கு முன்னர், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்
செய்தி முன்னோட்டம்
சிலருக்கு பயணங்களின் போது ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. சிலருக்கு, விமான பயணம் சேராது. அதிலும் அதிகாலை விமான பயணங்கள் சிலருக்கு மோசமான அனுபத்தை தருவதுண்டு. இருப்பினும், அதை விட மோசமான அனுபவத்தை, பயணத்திற்கு முன்னர் சில உணவுகளை உண்பதால் ஏற்படும் அபாயம் உண்டு. அத்தகைய உணவுகளை தவிர்ப்பது நல்லது.
விமான பயணத்திற்கு முன், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் இதோ:
வறுத்த உணவுகள்: விமானத்தில் ஏறும் முன்னர், நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்கும்போது, ஆரோக்கியமற்ற வறுத்த உணவுகளான பர்கர்கள், நகட்ஸ்கள் மற்றும் பிரஞ்சு பிரைஸ் உண்ண தோணும். கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள் நிறைந்த, இந்த உணவுகள், பறக்கும்போது, ஜீரணிக்க கடினமாக இருக்கும். அதனால், நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு ஏற்படலாம்.
விமான பயணம்
விமானம் ஏறும் முன்னர், ஆப்பிள் சாப்பிடுவதை தவிர்க்கவும்
ஆப்பிள்கள்: ஆப்பிள்கள், ஆரோக்கியமான சத்தான பழம் தான். ஆனால், அவற்றில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து, ஜீரணத்தை கடினமாக்குகிறது. அவற்றில் அதிக அளவு சர்க்கரையும், பறக்கும் போது, குடல் அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, ஆரஞ்சு, பப்பாளி அல்லது வாழைப்பழங்களை, விமானத்திற்கு முன் சாப்பிடுங்கள்.
காரமான உணவு: விமான பயணத்திற்கு முன், காரமான உணவுகளான பிரியாணி, கறி வகைகள், ஊறுகாய் போன்ற மசாலா நிறைந்த உணவுகளை உண்பது, வயிற்று உபாதை, நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை ஏற்படுத்தும். இந்த உணவுகளில், அதிக கலோரிகள் உள்ளதால், செரிமானம் கடினமாகும்.
ப்ரோக்கோலி: விமானத்தில் ஏறும்முன், சாலட்களை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது. அதற்கு பதிலாக வெள்ளரிக்காய், கேரட் போன்ற இலகுவாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடுங்கள்.