உங்கள் நுரையீரலை பாதுகாக்கும் சில காய்கறிகளும், பழங்களும்
தற்போது ஊரெங்கும் 'வைரல் இன்ஃபெக்ஷன்' புது புது அறிகுறிகளுடன் பரவி வருகிறது. ஒரு சிலருக்கு வெறும் காய்ச்சலோடு நின்று விடும் இந்த வைரல் தொற்று, ஒரு சிலருக்கு நாள்பட்ட சளி, இருமல் என மாறுகிறது. வேறு சிலருக்கு மூச்சுத்திணறலையும் உண்டாக்குகிறது. இந்த நேரத்தில், உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியமாகிறது. அதற்கு, மூச்சுப்பயிற்சியுடன் கூடிய உடற்பயிற்சிகளும், ஊட்டச்சத்துகள் நிறைந்த காய்கறிகளை உண்பதும் கட்டாயம். அப்படி உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சில காய்கறிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
பீட்ரூட்
பீட்ரூட் மற்றும் அதனுடைய கீரைகள், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் சேர்மங்களைக் கொண்டுள்ளன. பீட்ரூட் மற்றும் பீட் கீரைகளில் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. அவை நுரையீரல் செயல்பாட்டிற்கு நன்மை பயக்கும். நைட்ரேட்டுகள், இரத்த நாளங்களைத் தளர்த்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ஆக்ஸிஜன் உறிஞ்சுதலை மேம்படுத்தவும் உதவுகின்றன. பீட்ரூட், நுரையீரலில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் ஒரு நோயான சிஓபிடி நுரையீரல் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, உடல் செயல்திறன் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள்கள்
ஆப்பிளை தொடர்ந்து சாப்பிடுவது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகிறது . எடுத்துக்காட்டாக, தொடர்ச்சியாக ஆப்பிள் சாப்பிடுவதால், தொடர்-புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் செயல்பாடு மேம்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. கூடுதலாக, வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆப்பிள்களை உட்கொள்வது, அதிக நுரையீரல் செயல்பாடு மற்றும் சிஓபிடியை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது. ஆப்பிள் உட்கொள்வது ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது. ஆப்பிளில் உள்ள ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் உணவு செறிவிற்கு உதவுகிறது
பூசணி
பூசணிக்காயின் சதை பகுதியில், பல்வேறு நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளது. பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் உள்ளிட்ட கரோட்டினாய்டுகளில் கலவை இந்த காயில் நிறைந்துள்ளன - இவை அனைத்தும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இரத்தத்தில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் இருப்பது வயதானவர்கள் மட்டுமின்றி, இளம் வயதினரிடையேயும் சிறந்த நுரையீரல் செயல்பாட்டுடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
மஞ்சள்
மஞ்சள், அதன் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு குணகளுக்காக அறியப்பட்டது. அது, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் உள்ள முக்கிய மூலக்கூறான குர்குமின், நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்க பயன்படுகிறது. 2,478 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், குர்குமின் உட்கொள்ளல், நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது