NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / சிறுநீரில் இந்த அறிகுறிகள் இருக்கா? அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிறுநீரில் இந்த அறிகுறிகள் இருக்கா? அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள்
    அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள்

    சிறுநீரில் இந்த அறிகுறிகள் இருக்கா? அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 06, 2024
    05:18 pm

    செய்தி முன்னோட்டம்

    உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அதிக ஆபத்துள்ள உடல்நல பிரச்சனைகளை உருவாக்கும்.

    கொலஸ்ட்ரால் ஒருவகையான ஒட்டும் மஞ்சள் நிறப் பொருளாகும். இது கல்லீரலில் நிரம்பினால், அடுத்து ரத்தத்தில் சேர ஆரம்பிக்கிறது.

    பின்னர் தமனிகளைத் தடுப்பதோடு, நரம்புகளில் ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனின் சுழற்சியைத் தடுக்கிறது.

    கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் பல வகையான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. உடல் சில சமயங்களில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகளை நமக்கு கொடுக்கிறது.

    ஆனால், அதை சரியாக புரிந்து கொள்ளாமல் புறக்கணிப்பதுதான் நிலைமையை மோசமாக்குகிறது.

    கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​நெஞ்சு வலி, அழுத்தம், தலைசுற்றல், கால்களில் வலி போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

    சிறுநீரில் அறிகுறிகள்

    அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான சிறுநீரில் காணப்படும் அறிகுறிகள்

    சிறுநீரில் கற்கள்: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​சிறுநீரில் கொலஸ்ட்ரால் கற்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

    சிறுநீரில் கொலஸ்ட்ரால் கற்கள் சிறிய அளவில் இருந்தால் அவை இயல்பானவை. ஆனால் அளவு அதிகரிக்கும் போது, ​​சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது. இது நெஃப்ரோடிக் நோய்க்குறியின் அறிகுறி என்றும் கூறப்படுகிறது.

    சிறுநீரில் நுரை வருதல்: கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​சிறுநீரில் நிறைய நுரை உருவாகத் தொடங்குகிறது.

    இது தவிர, சிறுநீரின் நிறம் சிறிது கருமையாக மாறும். இந்த இரண்டு நிலைகளும் இருப்பதை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

    இதர அறிகுறிகள்

    அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான இதர அறிகுறிகள்

    கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​மிகவும் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். தோலில் அரிப்பு மற்றும் தோல் மிகவும் வறண்டு இருப்பதும் இதன் அறிகுறியாகும். இது தவிர, உயர் இரத்த அழுத்தமும் அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாகும்.

    கண்களில் மஞ்சள் புள்ளிகள் அதிக கொலஸ்ட்ரால் அறிகுறியாகும். உடலில் உள்ள கொழுப்பின் அளவை சரிபார்க்க லிப்பிட் சுயவிவர சோதனை செய்யப்படுகிறது.

    இது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடுகள், உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் மற்றும் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் ஆகியவற்றின் அளவைச் சரிபார்க்கும் இரத்தப் பரிசோதனையாகும்.

    இவை பொதுவான அறிகுறிகள் மட்டுமேயாகும். இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்போது அருகிலுள்ள மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெறுவது நல்லது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உடல் நலம்
    ஆரோக்கியம்
    ஆரோக்கிய குறிப்புகள்
    உடல் ஆரோக்கியம்

    சமீபத்திய

    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி

    உடல் நலம்

    பல் துலக்க டூத் பிரஷ் வாங்கும் போது, நீங்கள் கவனிக்க வேண்டியவை ஆரோக்கியம்
    புரட்டாசி ஸ்பெஷல்: சத்தான வெஜிடேரியன் சிக்கன் சூப் செய்வது எப்படி? உடல் ஆரோக்கியம்
    ஆரோக்கியமான பப்பாளி லாலிபாப் செய்வது எப்படி ஆரோக்கியம்
    உங்கள் நுரையீரலை பாதுகாக்கும் சில காய்கறிகளும், பழங்களும்  ஆரோக்கியம்

    ஆரோக்கியம்

    உங்கள் தலைமுடிக்கு எளிதாக செய்யக்கூடிய மாதுளை மாஸ்க்குகள்  முடி பராமரிப்பு
    ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்  அழகு குறிப்புகள்
    தினமும் அதிகரிக்கும் கோடை வெயில்: நீங்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? கோடை காலம்
    சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் டீ அல்லது காபியைத் தவிர்க்க வேண்டும்: ICMR ஆரோக்கியமான உணவு

    ஆரோக்கிய குறிப்புகள்

    மஞ்சள் டீ: இந்த புதிய வகை டீயின் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு? ஆரோக்கியம்
    பித்தப்பையில் கல் உருவாக காரணமாகும் முக்கிய காரணிகள் இவைதான் உடல் ஆரோக்கியம்
    கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ளுங்கள் புற்றுநோய்
    முத்த நாள் 2024: முத்தமிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்  காதலர் தினம்

    உடல் ஆரோக்கியம்

    உடல் எடை குறைய, அன்னாசிபழத்தை சாப்பிடுங்கள்  உடல் பருமன்
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் உடல் நலம்
    வெறும் வயிற்றில் தண்ணீர் ஏன் குடிக்க வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் உடல் நலம்
    உலக  நீரிழிவு நோய் தினம் - நோய் ஏற்படும் ஆபத்து, தடுக்கும் முறைகள் குறித்து அறிவீர் நீரிழிவு நோய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025