Page Loader
உலக மனநல தினம்: உங்கள் மன ஆரோக்கியத்தை பற்றி 5 விஷயங்கள்
உங்கள் மன ஆரோக்கியத்தை பற்றி 5 விஷயங்கள்

உலக மனநல தினம்: உங்கள் மன ஆரோக்கியத்தை பற்றி 5 விஷயங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2023
07:10 pm

செய்தி முன்னோட்டம்

பதட்டம் என்ற உணர்வை நாம் அனைவரும் நன்கு உணர்ந்திருப்போம் - அந்த உணர்வு நம்மை உறைய வைக்கும், பயமுறுத்தும், பதற்றமடையச் செய்யும் மற்றும் தன்னம்பிக்கையை உடைக்கும். இருப்பினும், பொதுவாக, பெரும்பாலான மக்களுக்கு இந்த உணர்வு விரைவில் தானாகவே குறைகிறது. இருப்பினும், மனநல கோளாறுகள் அவற்றிலிருந்து வேறுபட்டவை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், அவர்களைத் துன்புறுத்தும் விஷயங்கள், நபர்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம் அல்லது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்யலாம். நிபுணர்களின் கூற்றுப்படி மனநல கோளாறுகள் முக்கியமாக ஐந்து வகைப்படும்:

card 2

Generalised Anxiety Disorder (GAD)

GAD என்பது பெரியவர்களில் கண்டறியப்படும் மிகவும் பொதுவான anxiety கோளாறு ஆகும். GAD உடையவர்கள் அன்றாட நிகழ்வுகள் அல்லது செயல்பாடுகள் குறித்து அதிகமாக கவலைப்படுவார்கள். அது ஒரு நிலையான போராட்டமாக மாறும். இது தூங்குவதில் சிக்கல், கவனம் செலுத்துவதில் சிரமம், தலைவலி போன்ற உடல் அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். GAD உடையவர்களுக்கு மனச்சோர்வு அல்லது பிற மனநல கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கும்.

card 3

பீதி

பீதி தாக்குதல்கள் எனப்படுவது தீவிர பயம் அல்லது பயங்கரமான மற்றொரு தாக்குதல் எப்போது நிகழலாம் என்ற ஆழ்ந்த கவலை கொள்வதால் ஏற்படும். இதன் விளைவாக விரைவான இதயத் துடிப்பு, தலைச்சுற்றல், மார்பு வலி, வியர்வை, மூச்சுத் திணறல் மற்றும் நடுக்கம் போன்ற உடல் அறிகுறிகளை உண்டாக்கும். பீதி தாக்குதல்கள் மிகவும் கடுமையானதாக இருக்கலாம். அவை மாரடைப்பு அல்லது அதுபோன்ற ஒரு அபாயகரமான நிலையில், தான் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க கூடும்.

card 4

Social Anxiety Disorder (SAD)

SAD ஆனது சமூக சூழ்நிலைகள் பற்றிய நிலையான மற்றும் தீவிரமான பயம் அல்லது கவலையை ஏற்படுத்தும். மக்களின் தீர்ப்பு, ஏளனம் அல்லது நிராகரிப்பு பற்றிய பயம் காரணமாக SAD உடையவர்கள் சமூக தொடர்புகளை முற்றிலும் தவிர்க்கலாம். இது தனிநபர்களுடன் உறவுகளை உருவாக்குவது, அவர்களின் வாழ்க்கையில் முன்னேறுவது அல்லது சமூக நடவடிக்கைகளை அனுபவிப்பது போன்றவற்றை செய்வதில் சிரமத்தை ஏற்படுத்தும். SAD என்பது குழந்தை பருவத்திலேயே தோன்றக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை.

card 5

அப்செஸிவ்-கம்பல்சிவ் டிஸ்ஆர்டர் (OCD )

ஒ.சி.டி என்பது பொதுவாக 1% க்கும் அதிகமான மக்களை பாதிக்கும் மற்றொரு வகையான மனநல கோளாறு ஆகும். OCD உள்ளவர்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும் தேவையற்ற, ஊடுருவும் எண்ணங்கள் அல்லது நடத்தைகளைக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, அவர்கள் வீடு அசுத்தமாக இருப்பதை பற்றி தீவிர பயத்தை அனுபவிக்கலாம். எடுத்த பொருள் எடுத்த இடத்தில வைக்கவில்லை என்றால் பதட்டத்தை அனுபவிக்கலாம். இது அவர்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடும்

card 6

Seperation Anxiety Disorder

இது வீட்டை விட்டு விலகி இருப்பது அல்லது அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிந்து இருப்பது பற்றிய தீவிர பயத்தை உண்டாக்கக்கூடியது. பெற்றோர்கள் அல்லது உடன்பிறந்தவர்களை பிரிவது பற்றி அதீத கவலை கொள்ளும் குழந்தைகள் இந்த வகை மனநல கோளாறால் பாதிக்கப்படக்கூடும். எந்த ஒரு மனநல பாதிப்பிற்கும், முறையே மருத்துவரை அணுகுவது அவசியமாகிறது. அடிக்கடி பதட்டத்தைத் தூண்டும் அறிகுறிகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட வகை Anxiety Disorder-ஐ கண்டறிய முடியும். இந்த கோளாறுகள், மருந்துகளால் சிகிச்சையளிக்கப்படுகின்றன. பல நேரங்களில், உளவியல் சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் இவை சரி செய்யப்படுகின்றன.