
இப்போது அதிகமாக சம்பாதிக்கலாம்..ஆனால் நீங்கள் நினைப்பது போல IT துறையில் அல்ல!
செய்தி முன்னோட்டம்
தற்போதுள்ள இளைஞர்கள் பலரும், தங்கள் கொண்ட இலட்சியத்தை கைவிடவும் முடியாமல், அதேநேரத்தில் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள். அனைவரும் நினைப்பது போல கம்ப்யூட்டர் தொழில்நுட்ப துறையில் மட்டும்தான் கை நிறைய சம்பாதிக்க முடியும் என்ற நிலை தற்போது மாறிவிட்டது.
IT துறையை விட அதிகமாகவே சம்பாதிக்கும் வாய்ப்பு தரும், அதே சமயம், உங்கள் தனித்திறமைகளை வெளிக்காட்ட உதவும் சில துறைகளும் உள்ளது. அவை:
எத்திகல் ஹேக்கர்: இதற்கு பொறியியல் படிப்போ, கம்ப்யூட்டர் சார்ந்த படிப்போ தேவை இல்லை. இந்த துறை சம்மந்தமாக ஏதேனும் செர்டிபிகேட் கோர்ஸ் படித்திருந்தால் போதுமானது. 3 வருடங்களிலேயே 2 லட்சத்திற்கும் மேலாக சம்பளம் வாங்கலாம்.
card 2
நிகழ்ச்சிகளை குறையின்றி நடத்தி தரும் ஈவென்ட் மேனேஜ்மென்ட்
ஈவென்ட் மேனேஜர்: பலரையும் ஒன்றிணைத்து, வெற்றிகரமாக ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்பது சாதாரண விஷயமே அல்ல. திருமணம், விருது வழங்கும் விழா, பிறந்தநாள் கொண்டாட்டம் என பலவித விழாக்களுக்கு, தேவைக்கேற்ப ஒருங்கிணைப்பதும் ஒரு கலைதான். ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் வரை வருமானம் தரும் துறை இது.
வீடியோ கேம் டிசைனர்: இது உங்கள் கற்பனை சார்ந்த துறை. கணினி அறிவியலில் ஒரு பட்டமும், வீடியோ கேம் டிசைன் துறையில் அடிப்படை அறிவுமே போதுமானது. ஒரு ஆண்டுக்கு 13 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
பிட்னெஸ் ட்ரைனர்: இப்போது அனைவரும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துகிறார்கள். அதிலும், தங்கள் தேவைக்கேற்ப பயிற்சிதரும், தனிப்பட்ட ட்ரைனர்களை விரும்புகிறார்கள். இதில் உங்கள் வேலை நேரத்தை நீங்களே முடிவு செய்யலாம்.