
கோடைகால பிரயாணத்தின் போது நீங்கள் பாதுகாப்பாக செல்ல, சில டிப்ஸ்
செய்தி முன்னோட்டம்
பொதுவாகவே பிரயாணங்களின் போது, கவனமாக இருக்க வேண்டும். பிரயாணத்தின் போது, உடல்நலத்தை தற்காத்து கொள்வது மிகவும் அவசியம். அப்போது தான் உங்கள் ஹாலிடே பயணம், சிறப்பாக அமையும்.
தற்போது கோடை விடுமுறை விட்டாச்சு. அதனால் குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு பிளான் செய்கிறீர்களா? உங்களுக்காக சில ட்ராவல் டிப்ஸ்
எப்போதுமே, உடலை நீரேற்றத்துடன் வைத்து கொள்வது அவசியம். அதிலும், கோடை வெப்பத்தினால் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்ய, கூடுதலாக திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
எனவே நாள் முழுவதும் தண்ணீர் மற்றும் திரவங்களை அதிக அளவில் குடிக்க வேண்டும். ஒரு தண்ணீர் பாட்டிலை எப்போதும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். அதேநேரத்தில், அதிகப்படியான காஃபின் மற்றும் ஆல்கஹால் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
கோடை பயணம்
கோடை காலத்தில், வெயிலில் செல்லும்போது, தக்க பாதுகாப்புடன் செல்லுங்கள்
அதேபோல, சூரியஒளியின் தீங்கு விளைவிக்கும் ஊதா கதிர்களில் இருந்து, உங்கள் சருமத்தை பாதுகாப்பது அவசியம். அதனால், வெளியே செல்லும் முன், சன்ஸ்க்ரீன் கிரீமை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பயன்படுத்திக்கொண்டு இருங்கள். புரா ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும் தொப்பி, கண்ணாடி, பருத்தி ஆடைகளை அணியவும்.
இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கவும்.
வெயில்காலங்களில், கடற்கரைகளில், எதிர்பாராத நேரத்தில், காற்றின் வேகம் மாறும். அதனால் அலைகளும் தீவிரமாகும். அதனால், கடற்கரையில் போடப்பட்டிருக்கும் எச்சரிக்கை விதிகளை பின்பற்றவும்.
கோடை காலங்களில், பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால், கைவசம், கொசு மருந்து, பூச்சி கட்டிகளை தவிர்க்கும் கிரீம்களை கைவசம் வைத்திருக்கவும்.