NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் சன்ஸ்கிரீனாக பயன்படும் சில இயற்கை பொருட்கள்
    வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் சன்ஸ்கிரீனாக பயன்படும் சில இயற்கை பொருட்கள்
    வாழ்க்கை

    வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் சன்ஸ்கிரீனாக பயன்படும் சில இயற்கை பொருட்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    April 02, 2023 | 09:00 am 1 நிமிட வாசிப்பு
    வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் சன்ஸ்கிரீனாக பயன்படும் சில இயற்கை பொருட்கள்
    சன்ஸ்கிரீனாக பயன்படுத்தக்கூடிய இயற்கை பொருட்கள்

    ஒருவரது சருமபராமரிப்பு பெட்டகத்தில் இருக்க வேண்டிய அவசியமான பொருட்களில் ஒன்று சன்ஸ்கிரீன். அது, உங்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்து, வெயிலினால் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள், மற்றும் புற ஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இரசாயனங்கள் நிறைந்த பல சன்ஸ்கிரீன்கள் சந்தையில் கிடைக்கின்றன. எனினும் நீங்கள் சில இயற்கை மற்றும் வீட்டு வைத்தியங்களையும் பயன்படுத்தலாம். அப்படி, சன்ஸ்கிரீன்களாக செயல்படும் சில இயற்கை பொருட்கள் இதோ: தேங்காய் எண்ணெய்: எளிதில் கிடைக்கக்கூடிய, இயற்கையான சன்ஸ்கிரீன், தேங்காய் எண்ணெய் ஆகும். இது, சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில், 20% த்தை தடுத்து, உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும். மேலும் இது சருமத்தில் உள்ள கறைகளை நீக்கி, உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.

    வைட்டமின் ஈ நிறைந்த எள் எண்ணெய் ஒரு சிறந்த சன்ஸ்கிரீன்

    எள் எண்ணெய்: மற்றுமொரு சிறந்த இயற்கையான சன்ஸ்கிரீன்களில் ஒன்றான எள் எண்ணெய், சூரியனின் புற ஊதா கதிர்களில் 30% தடுக்கிறது. இதனால் உங்கள் சருமம் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த எண்ணெய், சருமத்தில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. ஷியா பட்டர்: இது ஒருவகை வெண்ணெய் ஆகும். ஆனால், மிகக் குறுகிய நேரத்திற்கு வெளியே சென்றால் மட்டுமே சன்ஸ்கிரீனாகப் பயன்படுத்த முடியும், ஏனெனில் இதன் SPF மதிப்பு குறைவு. வைட்டமின்கள் ஏ, ஈ நிரம்பியுள்ள இந்த வெண்ணை,உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு பயன்படுத்த ஏதுவானது. கற்றாழை: பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த கற்றாழை, சருமத்தில் சிவத்தல், வெயில் எரிச்சல் மற்றும் வீக்கத்தைத் தடுப்பதில் சூப்பர் கில்லாடி.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சரும பராமரிப்பு
    சரும பராமரிப்பு குறிப்புகள்

    சரும பராமரிப்பு

    கோடைகால சரும பராமரிப்பு குறிப்புகள்: நீங்கள் இதுவரை அதிகம் கண்டுகொள்ளாத சில தவறுகள் சரும பராமரிப்பு குறிப்புகள்
    பருக்களின் வீக்கத்தால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்காக சில வீட்டு குறிப்புகள் சரும பராமரிப்பு குறிப்புகள்
    புதிய டாட்டூ குத்தியபின்பு, நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில பராமரிப்பு குறிப்புகள் சரும பராமரிப்பு குறிப்புகள்
    மேக்அப் பிரியர்களே, நீங்கள் செய்யக்கூடிய சில தவறுகள், உங்கள் சருமத்தை பாதிக்கலாம்! சரும பராமரிப்பு குறிப்புகள்

    சரும பராமரிப்பு குறிப்புகள்

    சரும பாதுகாப்பு: மிருதுவான சருமத்திற்கும், இளமையான தோற்றத்திற்கும் உதவும் பூக்கள் சரும பராமரிப்பு
    டால்கம் பவுடரை இதற்கும் பயன்படுத்தலாம்! வல்லுநர்கள் கூறும் சில பயன்பாடுகள் அழகு குறிப்புகள்
    குளிர் காலத்தில், வறட்சியாகும் சருமத்தை பாதுகாக்க எளிமையான வீட்டு வைத்தியம்! சரும பராமரிப்பு
    குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க எளிய வழிகள் சரும பராமரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023