NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கோடைகால சரும பராமரிப்பு குறிப்புகள்: நீங்கள் இதுவரை அதிகம் கண்டுகொள்ளாத சில தவறுகள்
    வாழ்க்கை

    கோடைகால சரும பராமரிப்பு குறிப்புகள்: நீங்கள் இதுவரை அதிகம் கண்டுகொள்ளாத சில தவறுகள்

    கோடைகால சரும பராமரிப்பு குறிப்புகள்: நீங்கள் இதுவரை அதிகம் கண்டுகொள்ளாத சில தவறுகள்
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 28, 2023, 07:50 pm 1 நிமிட வாசிப்பு
    கோடைகால சரும பராமரிப்பு குறிப்புகள்: நீங்கள் இதுவரை அதிகம் கண்டுகொள்ளாத சில தவறுகள்
    கோடை காலத்தில் உங்கள் சரும பராமரிப்பு மிகவும் அவசியமாகிறது

    கோடை காலத்தில், அதிக வெப்பம் மற்றும் வறட்சித்தன்மை காரணமாக நமது சருமத்திற்கு கூடுதல் கவனமும், கவனிப்பும் தேவைப்படுகிறது. நம்மில் பலர், நம் சருமப் பராமரிப்பில் சில தவறுகளை தெரியாமல் செய்வதால், அது பல்வேறு தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த தோல் பராமரிப்பு தவறுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். படுக்கைக்கு முன் மேக்கப்பை நீக்குவதில்லை: உங்கள் முகத்தில் இருந்து மேக்அப்பை அகற்றவது சோம்பறித்தனமாக தோன்றலாம். ஆனால் இது பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் ஒப்பனை அணியும்போது, அது, உங்கள் சருமத்தில் இருக்கும் எண்ணெய்கள், அழுக்குகள் மற்றும் மாசுகளுடன் கலந்து, உங்கள் சருமத்தின் மீது ஒரு அடுக்காக உருவாகிறது. இந்த அடுக்கு உங்கள் துளைகளை அடைத்து, கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளுக்கு வழிவகுக்கும்.

    உங்கள் சருமத்திற்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்துவது முக்கியம்

    சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதில்லை: வெளியில் செல்லும் போது, தினசரி SPF அடங்கிய சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். இது புற ஊதாக் கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும், நீரேற்ற அளவைப் பராமரிக்கவும் உதவும். மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதில்லை: சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதைப் போலவே மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவதும் முக்கியமானது. அது வறட்சி மற்றும் மென்மையான தன்மைக்கு வழிவகுக்கும். உங்கள் தோல் வகைக்கு பொருந்தாத தயாரிப்புகளைப் பயன்படுத்துதல்: உங்கள் சருமத்திற்கு ஏற்றார் போல மேக்அப் மற்றும் குளியல் சாதனைகளை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், முகப்பரு, வறட்சி அல்லது அதிகப்படியான எண்ணெய்த்தன்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். சரும மருத்துவரை அணுகி, உங்கள் சரும வகைக்கென, தனிப்பட்ட பரிந்துரையைப் பெறுவது முக்கியம்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சரும பராமரிப்பு
    சரும பராமரிப்பு குறிப்புகள்

    சரும பராமரிப்பு

    ஜோஜோபா எண்ணெயின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!  ஹெல்த் டிப்ஸ்
    நயன்தாரா மற்றும் சமந்தாவின் பளபளக்கும் சரும ரகசியம் வெளியாகியுள்ளது! நயன்தாரா
    ஷேவிங் செய்யும்போது ஏற்படும்  வெட்டு காயங்களுக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள் வீட்டு வைத்தியம்
    வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் சன்ஸ்கிரீனாக பயன்படும் சில இயற்கை பொருட்கள் சரும பராமரிப்பு குறிப்புகள்

    சரும பராமரிப்பு குறிப்புகள்

    பருக்களின் வீக்கத்தால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்காக சில வீட்டு குறிப்புகள் சரும பராமரிப்பு
    புதிய டாட்டூ குத்தியபின்பு, நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில பராமரிப்பு குறிப்புகள் சரும பராமரிப்பு
    மேக்அப் பிரியர்களே, நீங்கள் செய்யக்கூடிய சில தவறுகள், உங்கள் சருமத்தை பாதிக்கலாம்! சரும பராமரிப்பு
    சரும பாதுகாப்பு: மிருதுவான சருமத்திற்கும், இளமையான தோற்றத்திற்கும் உதவும் பூக்கள் சரும பராமரிப்பு

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023