தொடங்கியது தர்பூசணி சீசன்! தர்பூசணி பழத்தின் நன்மைகள் என்னவென்று தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
வெயில் காலம் துவங்கும் போதே, நம் உடலின் சூட்டை தணிக்க தர்பூசணி பழங்களும் வந்துவிடும்.
தர்பூசணி பார்ப்பதற்கு மட்டுமல்ல, உடலுக்கும் ஆரோகியமானது. அதிக நீர் சத்து உள்ள இந்த பழங்களை உண்பதால்,நமது உடலும் நீரேற்றம் அடைந்து, குளுமை அடைகிறது. ஆனால் இந்த தர்பூசை காலை உணவிற்கு பிறகும், மதிய உணவிற்கும் முன்னரும் உண்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், இரவு நேரங்களில் இந்த பழத்தை உண்பதால், வயிற்று போக்கு ஏற்படலாம் எனவும் கூறுகிறார்கள்.
இந்த தர்பூசணி பழத்தை உண்பதால் கிடைக்கும் மேலும் பல நன்மைகள் பற்றி காண்போம்:
அதிகரிக்கும் நோயெதிர்ப்பு சக்தி: இந்த பழத்தில், அதிக வைட்டமின் சி உள்ளது. இது உடலின் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.
தர்பூசணி
பளபளப்பான தோலுக்கும், ஆரோக்கியமான கூந்தலுக்கும், தர்பூசணியை தேர்ந்தெடுங்கள்
நோயெதிர்ப்பு சக்தி, புதிய செல்களை உருவாக்குதல் போன்றவற்றிற்கு ஏற்றது. அதோடு, தர்பூசணியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான தோல் மற்றும் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
எடை இழப்பிற்கு உதவுகிறது: தர்பூசணியின் உயர் நீர் நிலை மற்றும் நார்ச்சத்து ஆகியவை உணவுக்கு இடையில் பசியைத் தணிக்க உதவுகின்றன.
தர்பூசணியில் எதிர்மறை கலோரிகள் உள்ளன, அதனால் அதை உட்கொள்ளும் போது, செரிமானம் மூலம், அதிக கலோரிகளை எரிக்க முனைகிறது.
இதய பாதுகாப்பு: தர்பூசணியில் உள்ள பல கூறுகள் ஆரோக்கியமான இதயத்திற்கு உதவுகின்றன. தர்பூசணிகளில் உள்ள லைகோபீன், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.
ஈறு பாதுகாப்பு: தர்பூசணிகளில் உள்ள வைட்டமின் சி, ஆரோக்கியமான ஈறுகளுக்கு உதவுகிறது.