பருவகால சளி மற்றும் இருமலுக்கு, ஆன்டிபயாடிக்குகள் ஒத்து வராது என IMA தெரிவிக்கிறது
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக, பருவமாற்றம் காரணமாக, நுண்ணியிர் தாக்குதல்கள் பரவலாக பலரிடம் காணப்படுகிறது.
இதனால், குமட்டல், வாந்தி, காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகளுடன், பருவகால சளி மற்றும் இருமல் நேரும் போது, ஆன்டிபயாடிக்குகள் ஒத்து வராது என இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அறிவுறுத்தியுள்ளது.
IMA தனது அறிக்கையில், மூன்று நாட்களில் காய்ச்சல் சரியாகி, மூன்று வாரங்கள் வரை தொடர்ந்து இருமல் இருந்தால், அது பெரும்பாலும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் தாக்கமாக இருக்கும் என கூறுகிறது.
அதனால், இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக ஆன்டிபயாடிக் மருந்துகளை தேர்வு செய்யாமல், அந்த நோய் தொற்றின் காரணியை கண்டிபிடிக்குமாறு IMA கூறுகிறது. அதாவது, பாக்டீரியா தொற்றா அல்லது வைரஸ் தொற்றா என்று கண்டறிந்து வைத்தியத்தை துவங்க அறிவுறுத்துகிறது.
ட்விட்டர் அஞ்சல்
IMA அறிக்கை
Fever cases on rise - Avoid Antibiotics pic.twitter.com/WYvXX70iho
— Indian Medical Association (@IMAIndiaOrg) March 3, 2023