அதிகப்படியான முடி உதிர்விற்கு காரணமாகும் 5 உணவு வகைகள்
நீங்கள் அடிக்கடி உட்கொள்ளும் உணவிற்கும், முடி உதிர்தலுக்கும் சம்மந்தம் உண்டென்பதை அறிவீர்களா? அதிகப்படியான முடி உதிர்தலுக்கு, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவு வகைகள் இதோ: பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை அதிகமுள்ள உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக, சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை, எடுத்துக்கொண்டால், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரித்து இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. இதனால், ஆண்ட்ரோஜன் அளவு அதிகரித்து, மயிர்க்கால்கள் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் முடிக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. சோடா மற்றும் கார்பன்-பானங்கள்: கார்பனேற்றப்பட்ட பானங்களில் செயற்கை இனிப்புகள் அதிகமுள்ளன. இது முடி வளர்ச்சியை பாதிக்கும். இந்த பானங்கள், உடலில் இன்சுலின் அளவை பாதிப்பதால், ரத்த ஓட்டம் தடைபடும்.
முடி உதிர்விற்கு புரதம் குறைபாடும் ஒரு காரணி
உயர் கிளைசெமிக் குறியீடு உள்ள உணவுகள்: உயர் கிளைசெமிக் குறியீடு உள்ள உணவுகள், மிகக் குறைந்த நேரத்தில், அதிக அளவு சர்க்கரையை வெளியிடும். இதனால், உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். புரதம் குறைந்த உணவுகள்: போதுமான புரதம் உடலில் இல்லையென்றாலும், முடி உதிரும். நீங்கள் தேவைப்படும் அளவு புரதம் உட்கொள்ளாத போது, உங்கள் கூந்தலில் உள்ள, கெரட்டின் எனப்படும் புரதம் பாதிக்கப்படுகிறது. பச்சை முட்டையின் வெள்ளைக்கரு: முட்டையில் உடலுக்கு தேவையான புரதமும், பியோடினும் நிரம்பி உள்ளது. அது கெரட்டின் உற்பத்திக்கு உதவுகிறது. எனினும், முட்டையை பச்சையாக உட்கொள்ளும் போது, பயோட்டின் முழுதாக உடலுக்கு சென்றடையாது என உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.