NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / முடி முதல் சருமம் வரை அற்புத நன்மைகளை அள்ளி தரும், ஆமணக்கு எண்ணெய்
    பொழுதுபோக்கு

    முடி முதல் சருமம் வரை அற்புத நன்மைகளை அள்ளி தரும், ஆமணக்கு எண்ணெய்

    முடி முதல் சருமம் வரை அற்புத நன்மைகளை அள்ளி தரும், ஆமணக்கு எண்ணெய்
    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 17, 2023, 07:30 pm 1 நிமிட வாசிப்பு
    முடி முதல் சருமம் வரை அற்புத நன்மைகளை அள்ளி தரும், ஆமணக்கு எண்ணெய்
    ஆமணக்கு எண்ணெயின் நன்மைகள்

    ஆமணக்கு விதையிலிருந்து தயாரிக்கப்படும், இந்த ஆமணக்கு எண்ணெய்/ விளக்கெண்ணெய், சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. ஆமணக்கு எண்ணெய் உடலுக்கு அள்ளி தரும் மற்ற நன்மை பற்றி காண்போம். சரும பொலிவிற்கு: ரிசினோலிக் அமிலம் நிறைந்த ஆமணக்கு எண்ணெய், சருமத்தில் ஏற்படும் நீர் இழப்பை ஈடு செய்து, சருமம் மிருதுவாக மாற உதவுகிறது. காயங்களை ஆற்றம் அருமருந்து: இதில்,பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளன. அது தீக்காயங்கள், சிரங்கு, புண்கள் மற்றும் அறுவை சிகிச்சை காயங்களுக்கு சிகிச்சையளிக்க உதவும். இயற்கையான கூந்தல் கண்டிஷனர்: ஆமணக்கு எண்ணெய், உங்கள் தலையை வறட்சியிலிருந்து காக்கிறது. இதில் உள்ள ஓலிக் மற்றும் லினோலிக் அமிலங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பொடுகு மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.

    செரிமானத்திற்கு உதவும் விளக்கெண்ணெய்

    செரிமானத்திற்கு உகந்தது: ஆமணக்கு எண்ணெய், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) ஒரு சிறந்த இயற்கை மலமிளக்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம் மற்றும் ஒமேகா -9 கொழுப்பு அமிலத்தின் அதிக உள்ளடக்கம், மலமிளக்கி பண்புகளை அளிக்கிறது. இது செரிமான செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க: ஆமணக்கு எண்ணெய் உட்கொள்வதால், உங்கள் வெள்ளை இரத்த அணுக்கள் அதிகரிக்கிறது. ஆராய்ச்சியின் படி, இந்த எண்ணெய், T-11 செல்களின் எண்ணிக்கையையும், இரத்தத்தில் லிம்போசைட்டுகளின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. அதனால் உடலில், அதிக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. இது, பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. மேலும், இரத்த ஓட்டத்தை அதிகரித்து, நிணநீர் வெளியேற்றத்தை மேம்படுத்துகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உடல் ஆரோக்கியம்
    உடல் நலம்

    சமீபத்திய

    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்

    உடல் ஆரோக்கியம்

    மென்ஸ்சுரல் கப் என்றால் என்ன? அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் பெண்கள் ஆரோக்கியம்
    உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை பற்றி வெளிப்படுத்தும் உங்கள் தலைமுடி! முடி பராமரிப்பு
    தேநீரைப் பற்றி நீங்கள் இவ்வளவு நாளும் நம்பி கொண்டிருந்த கட்டுக்கதைகள் என்னவென்று தெரியுமா? உணவு குறிப்புகள்
    நீண்ட ஆயுளுக்கான 'ரகசியத்தை' வெளிப்படுத்திய 108 வயது லண்டன் பாட்டி வைரல் செய்தி

    உடல் நலம்

    டிஜிட்டல் திரை ஒளி, உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது எனத்தெரியுமா? உடல் ஆரோக்கியம்
    அரிசி vs கோதுமை: எடை இழப்பிற்கு சிறந்த உணவு எது உடல் பருமன்
    நாள்பட்ட சோர்வு நோய்க்குறியின் அறிகுறிகளும், அதன் காரணங்களும் உடல் ஆரோக்கியம்
    சுற்றுலாவின் போது நீங்கள் நோய்வாய்ப்படுவதை எவ்வாறு தவிர்க்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள் சுற்றுலா

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023