சரும பாதுகாப்பு: மிருதுவான சருமத்திற்கும், இளமையான தோற்றத்திற்கும் உதவும் பூக்கள்
இயற்கையின் அழகியலை பிரதிபலிக்கும் பூக்கள், உங்கள் சருமத்திற்கும் அழகை கூட்டும் என்றால் நம்பமுடிகிறதா? சரும பாதுகாப்பிற்கும், இளமை தோற்றத்திற்கும் உதவும் சில பூக்களின் தொகுப்பு இதோ: சூரியகாந்தி பூ: இந்தப்பூவை காயவைத்து, பொடி செய்து முகத்தில் தேய்த்து வர, கரும்புள்ளிகள் நீங்கும். ரோஜா: அனேக அழகு சாதன பொருட்களில், ரோஜா பூவை அடிப்படையாக கொண்டு தயாரிக்கின்றனர். ரோஜா இதழை அரைத்து பூசினால், முகம் பொலிவடையும். முகப்பருவுக்கு சிறந்த தீர்வு ரோஜா பூ என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கேமொமில்: அரோமாதெரபியில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த பூக்கள், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க உதவும். நறுமணம் மிக்க இந்த பூக்களை பொடி செய்து எலுமிச்சை சாறு அல்லது பாலை சேர்த்து உபயோகித்து வர முகம் பொலிவடையும்.
உடல் சூட்டை தணிக்கும் அல்லி
அல்லி பூ: உடல் சூட்டை தணிக்கும் இந்த அல்லி பூ, உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் வெடிப்புகளுக்கு சிறந்த மருந்தாகும். தாமரை: ஆண்டி-பையாட்டிக் தன்மை கொண்ட இந்த தாமரை பூ, உடலுக்கு குளிர்ச்சியை தரும். செம்பருத்தி பூ: ஊட்டச்சத்துக்களும், ஆண்டி ஆக்ஸிடன்டஸ் நிரம்பியுள்ள இந்த பூ, உங்கள் கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மல்லிகை: நறுமணம் மிக்க இந்த பூவை, அரோமாதெரபியில் பரவலாக உபயோகிப்பர். சென்சிடிவான சருமம் உடையவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது இந்த மல்லிகை பூ. கமேலி: இதுவும் மல்லிகை பூ வகையை சேர்ந்ததாகும். அரோமாதெரபிக்கு மிகவும் பயன் தரும் பூ இது. கேலண்டுலா: மரிகோல்டு என்று அழைக்கப்படும் இந்த பூ,மருந்துகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து பயன்படுத்துவதால், முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.