அடுத்த செய்திக் கட்டுரை

இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் சோலா ஐஸ்கிரீம்
எழுதியவர்
Venkatalakshmi V
Oct 27, 2023
05:29 pm
செய்தி முன்னோட்டம்
இணையத்தில் அவ்வப்போது வினோத உணவுகளின் ரீல்கள் வருவதுண்டு. அப்படி, இன்ஸ்டாகிராமில் தற்போது பிரபலமாகி வருகிறது இந்த சோலா ஐஸ்கிரீம்.
அதாவது, நாம் சோலா பூரி சாப்பிட்டிருப்போம். பெரிய சைஸ் பூரியுடன், கொண்டைக்கடலை கறியும், நறுக்கிய வெங்காயமும், பச்சைமிளகாயும் சைடு டிஷ்ஷாக பரிமாறப்படும்.
அதே நேரத்தில், ரோல் ஐஸ்கிரீம்-உம் பார்த்திருப்பீர்கள்.
இந்த இரண்டையும் இணைத்து செய்வது தான், இந்த புதுவித சோலா ஐஸ்கிரீம்.
இந்த துணிச்சலான சமையல் பரிசோதனையை இணையத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர்.
வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில், பூரியை சிறிய துண்டுகளாக கிழித்து, ரோல் ஐஸ்கிரீம் செய்யப்படும் ஐஸ் ஸ்லாபில் போட்டு, அதனுடன் சோலா என்றழைக்கப்படும் சுண்டல், பால் போன்ற பொருட்களை சேர்த்து, ஐஸ்கிரீம் போல ரோல் செய்து பரிமாறப்படுகிறது.